Aug 10, 2010

பி.பீ.ஓ. நாட்குறிப்புகள் - ௦6

புதுப்புது அர்த்தங்கள்


பாபு பி.பி.ஓ'வில் வேலைக்குச் சேர்ந்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. முதல் மாத சம்பளத்தில் ஹேர் கலரிங், இரண்டாம் மாத சம்பளத்திற்குப் பின் டியூ கட்ட முடியும் என்ற தைரியத்தில் புதிய பஜாஜ் அவென்ஜர் வண்டி என பையன் ஸ்டைலிஷாக மாறிப்போனான்.

பொல்லாதவன் (2008) தனுஷ் கணக்காக "ஐ காட் எ ஜாப், ஐ காட் எ பைக்" என அவன் நட்பு வட்டத்தில் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு உதார்விட்டுத் திரிவதாகக் கேள்வி.

இவையெல்லாம் எதிர்பார்த்ததுதான். ஆனால், அவன் அம்மாவால் புரிந்து கொள்ள முடியாதது அவன் பேச்சின் உள்ளே ஊடாடும் புதுப் புது வார்த்தைகளும் புரிந்து கொள்ள முடியாத வாக்கியப் பிரயோகங்களும். 
"அம்மா, அண்ணனை சொல்லி வை! அவனோட ஆடிட்யூடே வர வர சரியில்லை"


"மாம்! ஜஸ் திங்க் அவுட் சைட் தி பாக்ஸ் மா! பழைய புராணம் பாடாதே"

"நான் சொல்றது புரியுதா உனக்கு. வா, உக்காரு! லெட்ஸ் மேக் ஷ்யூர் தட் வி ஆர் ஆன் தி ஸேம் பேஜ்"

தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போலிருந்தது அவன் அம்மாவுக்கு.  

நான் முதலில் இங்கே வேலை செய்யத் துவங்கிய போது ஒரு முறை லிப்டில் இரண்டுபேர் சம்பாஷித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பேசிய வார்த்தைகள் தனித் தனியே புரிந்தது, ஆனால்.... சரி, என்ன பேசினார்கள் எனப் பார்ப்போம்.

"You know our people are our best assets, but guys should ramp up with their time management skills. Guys should have "ready, fire, aim" kind of attitude. Let's roll up our sleeves buddy, ok ?"
.....என்பதாக சென்று கொண்டிருந்தது அந்த one-way சம்பாஷனை. பேசிக்கொண்டிருந்த மனிதர் யாரிடம் பேசிக்கொண்டிருந்தார் எனப் பார்த்தேன். அந்தப் பெண் ஏற்கெனவே ஸ்லீவ்லெஸில்  இருந்தாள். இதற்கு மேல் அவள் எங்கே ஸ்லீவை ரோல் செய்வது என எனக்கு வியப்பும் கூடவே கொஞ்சம் ஆர்வமும் மேலிட்டது.

பி.பி.ஓ'க்கள் மட்டும் என்றில்லை. பி.பி.ஓ'க்கள், ஐ.டி. கம்பெனிகள் உள்ளிட்ட மேனாட்டு நிறுவனங்களில் நுழைகையில்  நீங்கள் பழகிக் கொள்ள வேண்டிய வார்த்தைகள் என சிலப்பல உள்ளன. அவற்றில் என் பட்டியலில் உள்ள சிலவற்றை இங்கே தொகுத்திருக்கிறேன். 


இவற்றில் பலவும் நீங்கள் கேட்டுப் பழகியவையாக இருக்கக் கூடும். ஆனால் இவற்றின் பயன்பாடு நம் பொது வாழ்வில் முன்னூறு நாட்களுக்கு ஒருமுறை என்றாலும் எங்கள் நிறுவனங்களில் அவை மூச்சுக்கு முன்னூறு முறை.


Attitude:
மனோபாவம் என தமிழில் வழங்கப்படும் இந்த ஒற்றைச் சொல்லைச் சுற்றித்தான் இங்கே பலரது பிழைப்பும் ஓடுகிறது. "அவனோட attitude சரியில்லை", "வேலையெல்லாம் இருக்கட்டும், பையனோட attitude எப்படி?" என்பதாகத்தான் ஆரம்பிக்கும் ஒருவர் பற்றிய அடையாளக் குறிப்புகள்.


நீங்கள் நிர்வாகத்திற்கு நல்லவராக இருந்தால் "நல்ல வார்த்தையாகவும்" இல்லாவிடில் கெட்ட வார்த்தையாகவும் உங்களுக்குப் பலன் தரத் தக்கது இந்த attitude. 

Let's take this off-line:
"இதைப்பத்தி அப்புறம் விவாதிக்கலாம்" என அர்த்தம். உடனடியாக பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கு சபைகளில் சொல்லப்படும் சப்பைக்கட்டு காலம்கடத்தி இது.

let's be proactive here people:
அடுத்த கெட்ட வார்த்தை. முன்னெச்சரிக்கை செயற்பாடு எனலாமா இதனை? ஒரு நிகழ்வுக்குப் பின் அதனை சரிசெய்ய முயல்வது reactive. முன்னமே திட்டமிட்டு ஏதும் நிகழாமல் காப்பது proactive. 

Work life balance:
ஹி ஹி ஹி..... நோ கமெண்ட்ஸ்.


Ping:
"குறுகிய ஒலி" என்பது நேரடிப் பொருள். "ஜஸ்ட் பிங் மீ, ஐ வில் பே ஹியர்" என்றால், லைட்டா ஒரு விசிலடி எங்க இருந்தாலும் வந்துடறேன் என்பதான அர்த்தம்.


Let's make sure we're on top of it...:
"அது மேலே ஏறி ஒக்காந்துக்குவோம்" என்பதல்ல அர்த்தம். "சரியான டிராக்'ல வேலை நடக்குதான்னு சரிபார்த்துப்போம்" என்று அர்த்தம்.

Exceeding expectations:
ரேட்டிங் சமயங்களில் எங்கள் மக்களில் நூற்றில் இருபது பேருக்கு இது நல்ல வார்த்தை, மீதம் உள்ளவர்களுக்குக் கெட்ட வார்த்தை. எதிர்பார்ப்பிற்கு மேலாக செயற்படுதல் என அர்த்தம். யார் எதிர்பார்ப்பு? வேற யாரு மானேஜர்தான்! அது என்ன எதிர்பார்ப்பு? அது ரகசியம்.

EOD / COP / COB:


நாளின் இறுதியில் - End of the Day / Close Of Play / Close of Business

SPOC / POC:


Single Point Of Contact / Point Of Contact
ஏதேனும் ஒரு விஷயத்தில் ஒருவர் இன்சார்ஜ் என்றால் அவரை SPOC (ஸ்பாக்) எனலாம். Fun SPOC /  Transport SPOC / HR SPOC என வகை வகையாக ஸ்பாக்குகள் உண்டு.

Thinking outside of the box:
ஹி ஹி ஹி..... மீண்டும் நோ கமெண்ட்ஸ்.

Win-win situation:
இது ஒரு வழவழா கொழகொழா வார்த்தை விளையாடல். உள்ள வந்தா புரிஞ்சிக்கோங்க போதும்.

Headcount / Bandwidth / FTE:
எல்லாம் கிட்டத்தட்ட ஒன்றுதான். எத்தினி தல உன்னாண்ட வேலை செய்யுது என்ற கணக்குதான் இது. FTE என்றால் full time employee.

Ok, I am not sure if I am on top of what I try to achieve through this series. If I exceeded your expectations, I am more than happy. Catch you later....
.
.
.
courtesy: 3poundsofrealestate.com / http://asiascoutnetwork.com

2 comments:

childplay said...

Super Giri... Nice research and good knowledge sharing....

கிரி said...

Thanks Childplay!

Related Posts Plugin for WordPress, Blogger...