Oct 15, 2010

காடு வித்து கழனி வித்து (சவால் சிறுகதை)

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்

"கட் கட் கட்! ம்மா காமினி, இது சினிமாம்மா! அந்த ஆக்ரோஷம் கோவம் தெரியணும். உன்னை நான் என்ன சொன்னா நீ என்ன பண்ற? கதவை ஒடச்சுக்கிட்டு குதிக்கணும் தாயீ!! நீ ஜன்னல் கதவுல போயி மோது, நான் கட் சொல்லிக்கறேன்", கூவினார் டைரக்டர்.

காலையிலிருந்து ஏதும் சரிவர நிகழவில்லை டைரக்டருக்கு.

"போற போக்குல தீபாவளிக்கு படம் ரிலீஸ் பண்ண முடியும்னு எனக்குத் தோணலை. தோ பாருங்க சார்....அம்மா நீதான்மா, நீயும்தான் . நான் இந்தப் படத்துக்கு டைரக்டர் மட்டும் இல்லைம்மா. ஊர்ல காடு வித்து கழனி வித்து படத்துக்கு மொதல் போட்ட புரொட்யூசரும் நான்தான்மா. கொஞ்சம் சொல்றத புரிஞ்சி நடிங்க"

"சரி சார்."

மேலும் ஒன்றரை மணிநேர  தலை முட்டல்களுக்குப் பின் அந்த ஷாட் ஓகே ஆனது.

"நரசிம்மன்! இங்க வாங்க."

"சொல்லுங்க சார்"

"அடுத்து என்ன ஷாட்? அந்த சிவா சம்பந்தப் பட்டதா? அவன் வந்துட்டானான்னு மொதல்ல பாருங்க. அவன் ஒரு டிரெடிஷனல் லேட் கம்மர். வந்தான்னா அவனை அடுத்து டயலாக் கொடுத்து ரெடி பண்ணுங்க."

"வந்துட்டாரு சார். நான் பாத்துக்கறேன்"

கீழே விழுந்தது போல் கிடந்த காமினி எழுந்து நின்று ஓட எத்தனித்தாள்.

"ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

"ஏ நிறுத்துப்பா. அவ என்ன ஜன்னல் ஜாக்கெட்ட மூஞ்சிலையா கட்டியிருக்கா? துப்பாக்கிய முதுகுல வைப்பா. விறுவிறுப்புல கூட கிளுகிளுப்பு சேக்கலாம்னா விடமாட்டேன்றீங்க. சொன்னத செய்ங்கப்பா"

வேண்டா வெறுப்பாக சிவா அடுத்த டேக்கிற்குத் தயாரானான்.

"சார், இன்னைக்கு ஒரே ஜன்னல் சீக்வென்ஸா வருது சார். ஹி ஹி ஹி", என  சிரித்துக் கொண்டே ஜன்னலை சரி செய்து தளர்த்திக் கொண்டாள்  காமினி.

"ஏம்மா, உன் ஜன்னல் நம்ம தமிழ்நாட்டுப் பொதுஜனத்துக்கு, எனக்கு இல்லை. போயி அடுத்த டேக்குக்கு நில்லும்மா. வெறுப்பேத்தாத"

மீண்டும் இரண்டொரு மணி நேர இழுவைகளுக்குப் பின் அந்த ஷாட்டும் ஒகேவாக..

ப்படி மேலும் பலப்பல இடை-மேல்-கீழ்-ஊறுகளுக்குப் பின், படம் பப்படமாகி இப்போது அதன் இறுதிக்கட்டத்தை அடைந்திருப்பதாக தகவல்.

"நரசிம்மன் அந்த கிளைமேக்ஸ் டயலாக் நோட் பண்ணினோமே, கொஞ்சம் வாசிங்க!"

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

"இதுக்கு அப்புறம் போலீஸ் உள்ளே நுழையறதா வெச்சுக்கறோம், சரியா வருதா?"

"ஆமாம் சார், அப்படித்தான் நாம டிஸைட்  பண்ணியிருக்கோம். சார் உங்க போன் அடிக்குது"

"ஹலோ, யோவ் யாரு, டைரக்டர் கோபாலா? என்னய்யா படம் எடுத்துருக்க? ஜன்னலு, ஜாக்கெட்டு, வைரம், கடத்தலு? என்னய்யா, கொஞ்சம் கூட மாடனா யோசிக்க மாட்டியா? வெண்ண மாதிரி படம் பண்ணியிருக்க."

"ஹலோ, யாரு? யாரு பேசறது? என்னோட படம் பத்தி அப்படியே பாத்தா மாதிரி சொல்ற? இன்னும் கடைசி ஷெட்யூல் ஷூட்டிங் கூட முடியலை?"

"யோவ் நீ படத்த எடுத்துட்டே இருப்ப நாலு வருஷம். நாங்க இண்டர்நெட்டுல உன் படத்த எப்பவோ ரிலீஸ் பண்ணிட்டோம்யா"

"என்னது, படம் இன்னும் சென்சாருக்கே போகலை சார். இப்படியெல்லாம் அநியாயம் பண்ணாதீங்க. இதெல்லாம் அக்கிரமம். எங்க வயித்துல அடிக்காதீங்க. டேய்...டேய்... நான் போலீசுக்குப் போவேன். சைபர் கிரைம் போலீசுக்குப் போவேன்"

"அட போய்யா, அந்த போலீசே நான்தான். போ போ"

"சார்...சார்...! டைரக்டர் சார். என்னாச்சு உங்களுக்கு. எந்திரிங்க சார். அய்யய்யோ....!! சார்...!! இதுக்கெல்லாம் பதறாதீங்க சார். சார் எந்திரிங்க சார்...!! அய்யோ.............!!!!

ப்போது கடைசியாக "காமினி" திரைப்படம் ரிலீசாகி இரண்டு நாட்கள் ஆகின்றன.

"காடு வித்து கழனி வித்து சிலர் படம் பண்றாங்க. திருட்டு சி.டி'லயும் இண்டர்நெட்டுலயும் தயவு செஞ்சு படம் பாக்காதீங்க. பைரேட் பண்றவங்களால எங்க டைரக்டர் படம் வர்றதுக்கு முன்னாலேயே பரலோகம் போயிட்டாரு", என்று டைட்டிலுக்கு முன்னதாக நாசிம்மன் சொல்லி கனத்த சோகத்துடன் ஆரம்பமாகும் அந்தப் படத்தின் தியேட்டர் பிரிண்ட் அட்டகாசமாக இருப்பதாக வினோத் சொன்னான்.
.
.
.
<சவால் சிறுகதை>

14 comments:

சிவராம்குமார் said...

ஒரு வித்தியாசமான கோணம்.... நல்லா இருக்கு...

natbas said...

இப்படியும் யோசிக்க முடியுமா!!!!

நீச்சல்காரன் said...

ஒரு மெசேஜோட முடிச்சிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

Breeze said...
This comment has been removed by the author.
Breeze said...

இப்படி நடப்பது உண்மை தான் .காஞ்சிவரம் என்ற படம் சென்சர் வாங்குவதற்கு முன்னடிய, பெங்குளுருல கேபிள் tvla படத்த போட்டுடுங்க. கேபிள் tvla படத்த போட்டு 3 மாசம் கழிச்சு தான் தியேட்டர்ல ரிலீஸ் ஆச்சு.

அப்பாதுரை said...

வித்தியாசமா இருக்கு.
வாழ்த்துக்கள்

natbas said...

@அப்பாதுரை அவர்கள்

ஐயா உங்கள் கதைகள் ஒவ்வொன்றும் ரத்தினம்- அவற்றைக் காத்திருந்து படிக்கிறேன்.

Giri Ramasubramanian said...

@ சிவா

உங்கள் ஊக்கத்திற்கு என் மனமார்ந்த நன்றி...

Giri Ramasubramanian said...

@ நட்பாஸ்

கடைசி நிமிட யோசிப்பு. எப்படியோ எழுதி முடிச்சிட்டேன். ஹுர்ரே....!!

Giri Ramasubramanian said...

@ நீச்சல்காரருக்கு

மெசேஜ்? அது காமெடிங்க நம்ம ஊருல. அந்த மேசேஜ யாரு காது கொடுத்து கேட்டிருக்கோம்?

Giri Ramasubramanian said...

@ ப்ரீஸ்

தங்கள் மறு வருகைக்கு மிக்க நன்றி.

இதே கதையைத்தான் சரத்தின் சமீபத்திய ஜக்குபாய் திரைப்படம் சந்தித்தது.

Giri Ramasubramanian said...

@ அப்பாதுரை அவர்களுக்கு

தங்கள் வாழ்த்துக்கள் எனக்கு நூறு ஓட்டுக்கள் கிடைத்த பலத்தைத் தருகின்றன. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

Giri Ramasubramanian said...

@ கோபி அண்ணோவ்

உங்கள் லெவலுக்கு நம்மால மாளாதுங்ணோவ்.... ஏதோ நம்மாலான சீனி மிட்டாய் கமர்கட்டு....

aru(su)vai-raj said...

கதை நல்லா டச்சிங்கா இருக்கு. வாழ்த்துகள்

Related Posts Plugin for WordPress, Blogger...