இதோ இந்த ஆகஸ்ட் மாதம் வெளிவரவிருக்கிறது ஆரண்யம் திரைப்படம். கிட்டத்தட்ட எல்லோரும் புதுமுகங்கள். டைரக்டர், இசையமைப்பாளர், நடிக நடிகையர் பட்டாளம் என்று எல்லோரும் புதியவர்கள். S.R.ராம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். அந்தோணி தாஸ் தவிர்த்து பாடல் பாடியுள்ள அனைவரும் புதுமுகப் பாடக பாடகியர்.
ஓகே! விஷயம் இதுதான்....
ராதிகா - என் அலுவலகத்தில் பணிபுரிகிறார். இந்தப் படத்தில் இரண்டு முழுப் பாடல்களும் இரண்டு துண்டுப் பாடல்களும் பாடியிருக்கிறார் ராதிகா. அலுவலகத்தில் மேடைகளில் ஓரிருமுறைகள் இவர் பாடக் கேட்டிருக்கிறேன். நல்ல தேர்ந்த குரல் கொண்டவர். சாஸ்திரிய சங்கீத ஞானமும் உண்டு.
ராதிகாவுக்கு நம் வாழ்த்துகள். இசைத்துறையில் தாம் விரும்பும் நிலையை, இடத்தை அவர் அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து வாழ்த்துகிறோம்.
அவர் பாடியுள்ள நான்கு பாடல்களில் “காதல் மாயவலை” என்று தொடங்கும் இந்தப் பாடல் கேட்ட நொடியிலிருந்து காதினில் ரீங்காரம் இடுகிறது.
ராதிகா பாடும் இன்னொரு டூயட்டான ”மறஞ்சி கெடந்த” பாடலின் பல்லவி மட்டும் ஒரு சின்ன துக்கடாவாக ”சிறகை மடித்து” என்று தந்திருக்கிறார் S.R.ராம். Just Amazing....!
முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு அடித்து விளையாடியிருக்கிறார் S.R.ராம். குறிப்பாய் “அழகாகத் தொலைந்தேன் பாடல்” - ஆரம்பத்தில் செம்ம மிக்ஸிங் என்றால், பாடலின் இறுதியில் அடிப்பொளி ரிதம் மேஜிக் காட்டிப் பாடலை முடிக்கிறார். “காதல் மாயவலை” பற்றி முக்கியமாய்க் குறிப்பிட வேண்டும். பாடலின் முதல் நாற்பது விநாடி ப்ரீலூட் ஓர் அற்புதம். Thats one wonderful flute piece....! கேட்டுப் பாருங்கள்! S.R.ராம் தமிழ்த் திரையில் ஒரு பெரிய ரவுண்டு வர நம் இதயப்பூர்வ வாழ்த்துகள்.
படத்தின் முழு இசைத் தொகுப்பும் கீழேயுள்ள யூட்யூப் இணைப்பில்.....!!
ஆரண்யம் திரைப்படம் பெருவெற்றி பெறட்டும்!