#ஆண்கள்:
இன்று ராஜ் டிவியில் 90களின் மத்தியில் வந்த பழைய திரைப்படம் ஒன்று. மதியத் தூக்கம் முடித்து ஹாலுக்கு வந்து நான் அமர்ந்த போது படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ஓடிக் கொண்டிருந்தது.
தம்பி வீட்டினுள் நுழைகிறான். வீட்டினுள் அவனது அண்ணனானவன் இவனது மனைவியை பலவந்தப்படுத்தும் காட்சியைக் காண்கிறான் தம்பி. அண்ணனானவன் இப்போது தன் பலவந்தத்துக்கு ஒரு pause போட்டுவிட்டு தம்பியை கொலையடி அடிக்க வருகிறான். தமிழ்த் திரைப்படத் தம்பியான இவன், அண்ணன் மீது அதீத பக்தி கொண்டவன். அண்ணன் அடித்துத் துவைப்பவை அனைத்தையும் கையைக் கட்டிக்கொண்டு வாங்கிக் கொள்கிறான். அடித்துத் துவைத்தல் காட்சி வீட்டுக்கு வெளியே வருகிறது. கம்பும், கட்டையும், பானைகளும், ஓடுகளும் கொண்டு அண்ணன் அடிக்கிறான். கட்டையைக் கொண்டு தலையில் ஒரே போடு, அதையும் வாங்கிக் கொண்டு சமர்த்தாக சரிகிறான் தம்பி.
அண்ணன் pause'ல் விட்ட பணியைத் தொடர வீடு நுழைகிறான். திரும்பிப் பார்த்தால் சரிந்த சகோதரன் முதுகின் பின்னே நின்று கொண்டிருக்கிறான். சரி திருப்பித் தர வந்திருக்கிறான் என நாம் பார்த்தால், "என்னண்ணே இப்பிடியெல்லாம். வேணாம்ணே!", எனக் காலில் விழ வருகிறான்.
அண்ணனானவன் சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும் தம்பியின் அம்மா (??) புகைப்படத்தைக் கையிலெடுத்து அவளை அவமானம் செய்யும் சொல்லொன்றைச் சொல்லி அதை உடைக்கிறான்.
தம்பிக்கு வெறிகொண்ட கோபம் இப்போது வந்தே விடுகிறது.
"டாஆஆஆஆஆஆய்ய்ய்ய்ய்! அம்மாவையாடா தப்பாப் பேசுன?"
டிஷ்யூம் டிஷ்யூம் டிஷ்யூம். அடுத்த ஐந்தாம் நிமிடம் அண்ணன் காலி.
சுபம்.
No comments:
Post a Comment