நான் இங்க உங்கள கேக்கறது fishing இல்ல சார், PHISHING!
இந்த வார்த்தைஉங்களுக்கு புதுசா இருந்தா, இந்த article உங்களுக்காகத்தான்.
mailto:infocheck.axisbank@axisbankindia.net - இது போல ஏதாவது ஈமெயில் முகவரியில இருந்து உங்களுக்கு ஒரு மெயில் வரும். "சார், உங்க பாஸ்வோர்ட் செத்து போச்சு, எங்க சிஸ்டம் அத்து பூட்ச்சு, எங்க சர்வர் வெத்து ஆயிடுச்சி. அதனால நாங்க புதுசா ஒரு எடத்துக்கு எங்க வெப்சைட் மாத்தறோம், நீங்க கீழ இருக்கற லிங்க் கிளிக் பண்ணி login பண்ணுங்க" அப்டி இப்டி - இப்டி அப்டி-ன்னு உங்களுக்கு மெயில் வரும். அந்த லிங்க்-கும் பாக்கறதுக்கு http://www.axisbank.com/ அப்டின்னுதான் இருக்கும். ஆனா கிளிக் பண்ணினா அது உங்க பேங்க் வெப்சைட் போலவே exact-ஆ ஒரு போலி website-க்கு உங்கள கூட்டிட்டு போயிடும். இத நம்பி அவன் குடுக்கற லிங்க்-ல போயி உங்க credentials நீங்க குடுத்தீங்க..... அவ்ளோதான். நீங்க சேத்துவெச்ச பணம் எல்லாத்தையும் மறந்துட வேண்டியது தான். எங்கயோ ஒக்காந்துட்டு இருக்கற ஒருத்தனுக்கு ஈசியா உங்க எல்லா தகவலும் போயி சேந்துடும். அவன் அத யூஸ் பண்ணி உங்க பணத்த ஸ்வாகா பண்ணிடுவான்.
Cyber Crime பலவிதம். அதுல இது ஒரு விதம். பாத்து ஜாக்ரதையா இருங்க.
நான் இங்க axis-ன்னு யூஸ் பண்ணினது ஒரு உதாரணத்துக்கு. HDFC, ABN, ICICI அப்டின்னு எல்லா பேங்க் பேர்லயும் இந்த டகால்டி வேல நடக்குது.
No comments:
Post a Comment