அண்ணன் ப்ரூஸ் வில்ஸ் நடித்த படம்ன்னு அலுவலக நண்பர்கள் சத்யத்திற்கு என்னை இழுத்துப் போனார்கள்.
”ப்ரூஸ் வில்ஸ்.... ரைட்டு ஃபேஸ் ஆஃப்’ல நடிச்சவர்தானே?”, என்ற என்னிடம்
“யோவ் அந்த படத்துல நடிச்சவரு நிகலஸ் கேஜுய்யா”
“ஆ கரெக்ட்! மென் இன் ப்ளாக்ல க்ரிஸ் டக்கர் கூட நடிச்சவரு!’
“நாசமாப் போச்சு. அது க்ரிஸ் டக்கரில்லை. வில் ஸ்மித். கூட நடிச்சவர் ப்ரூஸ் இல்லை. டாம்மி லீ ஜோன்ஸ்”
“சரி வுடுய்யா! பவர்ஸ்டார் படமே தியேட்டர்ல பாத்தாச்சு. நமக்கு எதையும் தாங்கும் இதயம் உண்டு. இதையும் பாப்போம். சொல்லுங்க, இது எந்த மாதிரி படம்”
“யோவ்வ்வ்வ்வ் கிண்டலா? இது அக்மார்க் அட்வென்ச்சர் மூவி”
சத்யம் செரீன் ஸ்க்ரீனில் படம் ஆரம்பிக்க ஒருநிமிடம் முன்னே போய் அமர்ந்தோம்.
சும்மா சொல்லக் கூடாது. நூறு நிமிடங்கள் பரபரபரபரவென்று ஓடுகிறது படம். என்னைப் போன்ற தீவிர இலக்கிய ரசிகர்களுக்கு எட்டாத பக்கா மசாலாதான் படம் என்றாலும் படத்தின் முக்கால்வாசி சீட்டின் நுனியில் உட்கார்ந்துதான் பார்த்தேன் நான்.
அமெரிக்காவிலிருந்து மகனைக் காக்க ரஷ்யா பயணப்படுகிறார் ப்ரூஸ். அங்கே ஸீஸியம்... ஓ சாரி, வேறேதோவொரு அணுக்கதிர் தொடர்பான ஏதோ ஒன்று அதற்கான அது, இது என வில்லன்களின் பின்னணிச் சதிகள். சிஐஏ ஏஜண்டான ப்ரூஸின் இளரத்த மகன், வில்லன், இன்னொரு வில்லன், காமெடி வில்லன், டான்ஸாடும் வில்லன், இன்னொருவனின் மகள் என்று அரைடஜன் கதாபாத்திரங்கள். உலகில் சுபிக்ஷத்தை நிலைநாட்டும் சாகசங்கள் முடிந்து அப்பாவும் மகனும் அமெரிக்கா திரும்பி சுபமாய் நிறைகிறது படம்.
விஷயம் இதிலில்லை. ஆரம்பக் காட்சிகளில் ப்ரூஸ் ரஷ்யா வந்து இறங்கினதும் நடக்கும் கால்மணிநேர சேஸிங்’தான் நாம் தரும் நூற்று இருபது ரூபாய்க்கு ஜீரண மருந்து. படத்தின் டைரக்டர் கமல் ரசிகராயிருக்கவேணும். அடிப்பொளி என்று அந்த சேஸிங் காட்சியை எடுத்திருக்கிறார். அடுத்த படங்களுக்குத் தன் ரசிகரிடம் பாடம் கற்கலாம் கமல்.
மேலும் படத்தில் குறிப்பிட வேண்டிய விஷயம் ப்ரூஸ் வில்ஸ் பேசும் sarcasa வசனங்கள். தியேட்டர் அதிர்ந்து கொண்டே இருக்கிறது. நமக்கு அதில் பாதிதான் புரிந்தது வேறு விஷயம்.
நேரமிருந்தால் ஒரு நல்ல தியேட்டரில் போய் பார்த்து விடுங்கள். நல்ல எண்டெர்டெயினர்.

1 comment:
பார்க்கலாம்... நன்றி...
Post a Comment