கல்பற்றா நாராயணன் - அறம் கதை பற்றி...
|
”பாஷாபோஷினியில் வெளியான அறம் கதை சமீபத்தில் மலையாள இலக்கிய வாசகர்களை அதிரச்செய்த, மிகவிரிவான விவாதத்தை உருவாக்கிய கதை. மலையாளிக்கு அக்கதையில் இருந்து கிடைப்பது மொழிக்கு அப்பாற்பட்ட மானுட அம்சம். ஒட்டுமொத்தக் கதையை முதலில் வாசிக்கிறோம். ஒவ்வொரு வரியிலும் வெளியாகும் கவித்துவத்தை மீண்டும் வாசிக்கவேண்டும். ‘இருளின் பிரார்த்தனை அல்லவா ஒளி’ என்ற வரியைப்போல ‘புலி காலெடுத்து வைப்பது போன்ற பேச்சு’ போன்ற வரியைப்போல கவிதையால் நிறைந்த கதை அது.”
- கல்பற்றா நாராயணன்
|
|
அறம் பற்றி கமல் ஹாசன் - நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில்...
|
|
Kamal
|
"படிக்கும்போது வரி தெரியாமல் கண்கலங்கிய புத்தகம். உண்மை மனிதர்களின் கதை. அறம் என்னும் இச்சிறுகதைத் தொகுப்பை அனைவரும் படிக்கவேண்டும். ஜெயமோகன் போன்றவர்கள் சினிமாவுக்கு வந்ததில் எனக்கு மகிழ்ச்சி."
- கமல் ஹாசன்.
|
|
வாசகர் கருத்து... நூறு நாற்காலிகள் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து இன்னும் விலகமுடியாத வலியோடு எழுதுகிறேன். ஒரு எழுத்தின் மூலமாக இத்தனை வலிமிகுந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை இன்றுதான் உணர்கிறேன். கிராமத்தில் இருந்து முதல் தலைமுறையாக படித்து சமூகத்தில் ஒரு சக்தி மிகுந்த ஆளாக நகரத்தில் வாழ்ந்து வரும் ஆதிக்க சாதி மனிதர்களும், கிராமத்தில் வாழும் பெற்றோர்களால் நீங்கள் குறிப்பிட்ட சில சங்கடங்களை சந்தித்தே வருகின்றனர். ஆனால் “நூறு நாற்காலிகள்” வரும் “காப்பன்” நிலை மனிதனாக பிறந்த எவருக்குமே வரவேகூடாத அனுபவங்கள். தாழ்த்தப்பட்டவர்கள் சமூகத்தின் அதிகாரவர்க்கத்தில் உயர்ந்தாலும் அவர்கள் அதிகாரம் செல்லாது என்பதை ஒவ்வொரு வரியிலும் தெளிவாக்கி இருக்கிறீர்கள். நீங்கள் குறிப்பிட்டதை போல ஒரு நாற்காலி என்பது நூறு நாற்காலிகள் என்று ஆகும்போது நிச்சயம் நல்ல மாற்றம்வரும். - கிருஷ்ணகுமார், சவுதி அரேபியா
|
வாசகர் கருத்து
”வணங்கான் படித்தேன்.ஒரு சமூக அவலத்தை எப்படி எதிர்கொண்டு வெளி வருவது என்ற காந்தியக் கோட்பாட்டின் உதாரணமாக் விளங்குகிறது. ”அநீதிக்கு அடிமைப்படும் மக்கள் உண்மையில் அநீதியுடன் சமரசம் செய்து கொண்டவர்கள். உங்கள் குலத்தில் மிகப் பெரும்பாலானவர்கள் அந்த வாழ்வுக்குப் பதிலாக மரணத்தைத் தேர்வு செய்திருந்தால் ஒன்று உங்கள் குலம் அழிந்திருக்கும்,இல்லை வென்றிருக்கும்”- பின் தொடரும் நிழலின் குரலில் பாபு (காந்தி)வின் குரலாக ஒலித்த உங்கள் மகத்தான வரிகள் நினைவில் எதிரொலிக்கின்றன.”
- ராமானுஜம்
|
|
நாஞ்சில் நாடன் - அறம் பற்றி...
|
”தாயார் பாதம், மத்துறு தயிர் இரண்டுமே நுண்மையான மரபிலக்கிய சுட்டிகள் கொண்ட கதைகள், மரபிலிருந்து வாசித்தெடுக்கவேண்டிய பல உள்ளடுக்குக்ள் கொண்டவை. தமிழ் மொழியின் இலக்கியச் சாதனைகளில் ஒன்று இந்த தொகுதி.”
-- நாஞ்சில் நாடன்.
|
|
வாசகர் கருத்து... ”யானை டாக்டர் , மத்துறு தயிர் , மற்றும் சோற்று கணக்கு மூன்று கதைகளும் இரண்டு வாரங்களாக எனது சிந்தனையிலும் உணர்விலேயும் மத்துக் கொண்டு கடைவது போலவே இருக்கிறது. டாக்டர் கே , கேத்தேள் சாஹிப், பேராசிரியர், போன்ற மனிதர்கள் எங்காவது தென் படுகிறார்களா அல்லது இந்த முப்பது வருஷ வாழ்க்கையில எங்கேயாவது சந்தித்திருக்கின்றோமா என்று மனம் தேடிக் கொண்டே இருக்கின்றது ” - கேசவன் யானை பற்றி அடுத்தடுத்து இரண்டு கதைகள்… வணங்கான் & யானை டாக்டர். அதென்னவோ யானை மேல் ஏறுவதென்பது அலாதிதான். யானை டாக்டரில் பீர்பாட்டில்கள் எப்படி அவற்றைக் கொல்கின்றன என்பதைப் படிக்கப்படிக்க என்னவோ செய்கிறது. உடலெங்கும் புழுக்கள் நெளிவதைப் போல. பீரும் புளித்தால் புழு நெளியும். புழு நெளியும் மூளைகள்தான், பீர்ப்புட்டிகளைக் காடுகளில் வீசிச் செல்கின்றன. - க.சுதாகர்
|
|
No comments:
Post a Comment