நான் இண்டர்நெட்டுக்கு மட்டுமே உபயோகிக்கும், இதுவரை யாரிடமும் நம்பரைப் பகிராத என் மொபைலில் ஒரு இன்கமிங் அழைப்பு வந்தது. ஓகே, இது கண்டிப்பாக ஏதேனும் மார்க்கெட்டிங் அழைப்புதான் என்று தயாராக பச்சை பட்டனை அமுக்கினேன்.
”ஸாஆஆஆர்ர்ர்ர்ர்ர்....”, தேமதுரக் குரல்....
ஆஹ்ஹா! அத்தேத்தான்.... ரெடியாவுடா கொமாரு....
“ஹலோ”
”நான் பஜாஜ் அலியான்ஸ்லருந்து பேஸரன் ஸ்ஸார்....”
“பேசுங்க மேடம்”
“நாங்க random முறைல ஆயிரம் நம்பர்ஸ் தேர்ந்தெடுத்து அவங்களுக்கு மட்டும் ஒரு ஸ்பெஷல் ஆஃபர் தர்றோம்”
“ஓ! நல்ல விஷயமாச்சே!”
“உங்களுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு இன்ஷூரன்ஸ் பாலிசி இலவசமா தரப் போறோம் சார்”
“ஆஹா! சூப்பர். ஒரு லட்ச ரூபா எனக்கு எப்போ தருவீங்க?”
“ரூபா உங்களுக்குத் தர மாட்டோம் சார்”
“அப்போ யாருக்குத் தருவீங்க?”
“பாலிசி உங்களுக்குத் தருவோம் சார்., அதோட ஸம் அஷ்யூர்ட் ஒன் லாக் ருப்பீஸ்”
“புரியுது புரியுது. சூப்பருங்க. கலிகாலத்துல காலடிச்சு ஒரு லச்ச ரூவா இனாமாத் தர்றீங்கன்னா ஊர்ல ஏதோ சுனாமிதான் வரப்போவுது”
“கரெக்ட் சார். இல்லை இல்லை சார். இது ஒரு ப்ரமோஷன் ஆஃபர் சார்”
“ஏதோ ஒண்ணு. நல்லது நடந்தா சரி. பாலிஸி எப்போ எனக்கு தருவீங்க?”
“இதுக்கு உங்களுக்கு மூணு தகுதி இருக்கணும் சார்”
“மூணு படம் நான் பாத்திருக்கேனுங்க”
“இல்லை சார். த்ரீ எலிஜிபிலிடி க்ரைடீரியன்ஸ்”
“ஓ... ஓகே சொல்லுங்க....”
“உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சா?”
சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, மனைவி அருகில் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு... “இல்லியே.... இன்னும் ஒரு தபாகூட ஆவலைங்க”
“ஓ.... உங்க அப்பாவுக்கு என்ன வயசு?”
“அவர் போவும்போது அவருக்கு அம்பது. இப்போ இருந்திருந்தா எழுபது”
“ஆ.... உங்க வீட்ல கல்யாணமானவங்க வேற யார் இருக்கா”
“பையனுக்கு மூணுவயசுதான், இன்னும் கல்யாணம் ஆகலை. அது தவிர்த்து பை டீஃபால்ட் அப்பாவும் அம்மாவும் கல்யாணம் ஆனவங்க”
“பையனா? கல்யாணம் ஆகலைன்னு சொன்னீங்க?”
“கல்யாணம் ஆகலைன்னுதானேங்க சொன்னேன். பையன் இல்லைன்னா சொன்னேன்”
“சார், நீங்க என்னை கலாய்க்கறீங்களா”
“அடடே! புரிஞ்சிடுச்சா உங்களுக்கு..... சூப்பர் போங்க”
“சார், உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சா இல்லையா?”
“உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சா இல்லையான்னு சொல்லுங்க. அப்ப நானும் சொல்றேன்"
"சார், நாங்க எங்க பர்சனல் டீடைல்ஸ் எல்லாம் ரிவீல் பண்ணக் கூடாது சார். நேம் கூட ஸ்யூடோ நேம்லதான் பேசுவோம்”
”ஆ... நெல்லாக்குதே கத.... நாங்க எங்க டீட்டேல் எல்லாம் சொல்லுவோம். நீங்க எதுவும் சொல்ல மாட்டீங்களா?”
“ஓகே சார். இந்த பாலிஸி உங்களுக்கு வேணுமா வேணாமா?”
“வேணாம்”
“ஓகே சார். உங்க ஃப்ரெண்ட்ஸ் யாராவது இருந்தா ரெஃபர் பண்ணுங்களேன்”
“எனக்கு இருக்கற ஒரே ஃப்ரெண்ட் என் வைஃப்தான். அவங்க நம்பர் தரவா?”
க்கூங் க்கூங்....க்கூங் க்கூங்....
5 comments:
ஹா ஹா ஒரு காலத்துல இவங்க அலப்பறை ரொம்ப அதிகமா இருந்தது.... இப்போ பரவாயில்லை...
அட எனக்கென்னவோ இப்போ அதிகமுன்னு தோணுதுங்க
இப்பவும் இவங்க தொல்லை தந்துட்டு தான் இருக்காங்க.....
ஒரு தடவை உங்களுக்கு லோன் சாங்க்ஷன் ஆயிடுச்சுன்னு ஃபோன். ரொம்ப சந்தோஷம். திரும்பி தரவேண்டாம் இல்லையான்னு கேட்டேன்..... கனெக்ஷன் கட்! :)
@ Venkat Nagaraj
I think I am better when compared with you :)))
மொபைல் வைத்திருக்கும் அனைவரும் இதனையே தொடரவேண்டும்.ஏனெனில்
அவசரமா எங்கேயாவது வண்டியில் போய்க்கொண்டு இருக்கும் போதுதான் இந்த நாதாரிகள் அழைத்து பாடாய்படுத்துவது்.கொடுமை.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
Post a Comment