Office team outing-ல் இன்று நாடோடிகள் படம் பார்த்தோம். இரு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால் "நல்ல படம்".
காதலர்கள் இணைவதில் காதலின் வெற்றி இல்லை, அவர்கள் அதன் பின்னர் வாழ்ந்து காட்டும் விதத்தில்தான் உள்ளது என்பது படத்தின் Moral. உயிரைப் பணயம் வைத்து நண்பனின் காதலை சேர்த்து வைக்கிறார்கள் கதை மாந்தர்களான சசி, விஜய், பரணி மூவரும். சேர்த்து வைக்கும் வேலைக்கு விலையாக "கால்", "காதல்", "காது" என ஒவ்வொன்றை இழக்கிறார்கள் ஒவ்வொருவரும். சேர்த்து வைத்த காதலர்கள் செய்துகொண்ட கல்யாணத்தை விளையாட்டாய் முறித்துக்கொண்டு விவாகரத்து வரை சென்று நிற்கும்போது உஷ்ணமாகிறார்கள் மூன்று தோழர்களும். காதல் ஜோடிக்கு மூவரும் தண்டனை தர நினைக்கிறார்கள். கொடுக்க நினைக்கும் தண்டனை "போட்டு தள்ளுவது". முடிவில் என்ன நடக்கிறது என்பதை சமுத்திரக்கனி அழகான பாணியில் சொல்லி இருக்கிறார். Hats Off!!
சின்ன சின்ன பாத்திரங்களுக்கும் படத்தில் முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள். அபினயா நடிப்பில் பின்னியெடுக்கிறார். அனன்யா looks good. இந்தப் படத்தில் நடிக்க அவருக்கு scope குறைவு.
இடைச் செருகலான அந்த highway குத்துப் பாட்டை தவிர்த்துப் பார்த்தால் இது ஒரு நிறைவான படம்.