ஜிமெயில் உள்ளே லாகின் ஆகும் போது மின்னஞ்சல்கள் தேதி வாரியாக பட்டியலிடப்பட்டு இருக்கும். புதிதாக வந்த மின் அஞ்சல்கள் முதலில் இருக்கும். படித்தவை / படிக்காதவை என்று தனியாக இருப்பதில்லை.
நாம் வாசிக்காத மின்னஞ்சல்களை மட்டும் காண ஜிமெயிலின் தேடல் பகுதியில் 'is:unread in:inbox' என்று கொடுத்து 'Search Mail' கிளிக் செய்தால் வாசிக்காத மின் அஞ்சல்களை மட்டும் காட்டும்.
ஒவ்வொரு முறையும் இவ்வாறு கொடுத்து பார்ப்பது அயர்ச்சியை தந்தால் ஒரு புக்மார்க்லேட் (Bookmarklet) மூலம் இந்த வேலையை செய்ய வைக்கலாம். இந்த Gmail Bookmarklet என்பதனை Drag செய்து புக்மார்க் டூல் பாரில் விட்டு விடுங்கள்.
இனி அந்த புக்மார்க்கை கிளிக் செய்யும் போது வாசிக்காத ஈமெயில்கள் மட்டும் தோன்றும். நீங்கள் ஒன்றிற்கும் மேற்பட்ட ஜிமெயில் கணக்குகள் வைத்து இருந்தால் ஒவ்வொன்றிற்கும் ஒரு புக்மார்க்லேட் உருவாக்க தேவை இல்லை. இது ஒன்றே போதும். நீங்கள் எந்த ஜிமெயில் கணக்கில் லாகின் ஆகி உள்ளீர்களோ அந்த கணக்கில் உள்ள வாசிக்காத மெயில்களை காட்டும்.
No comments:
Post a Comment