இந்த அரசியல் விளையாட்டு எதுவும் நமக்கு புரிய மாட்டேங்குது தலைவா!
விடுதலைப் புலிகள் பற்றி செல்வி அவர்கள் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு தாத்தா ஏதோ விளக்க உரை அளித்திருக்கிறார். உங்களுக்கு புரியுதா பாருங்க!
கேள்வி:- நீங்கள் 18-11-2009 அன்று "நம் மவுன வலி; யாருக்கு தெரியப் போகிறது?'' என்ற தலைப்பில் எழுதிய கடிதம் பற்றி பலபேர் ஒன்றுபட்ட கருத்துக்களை தெரிவித்த போதிலும், ஒருசிலர் அதை ஏற்காமல் விமர்சனம் செய்கிறார்களே?பதில்:- ஈழ விடுதலைப்போரில் வீழ்த்தப்பட்ட வேங்கை பிரபாகரனுக்காக என் விழிகள் நீரைப் பொழிகின்றன- அதே நேரத்தில் இளந்தலைவர் ராஜீவ்காந்தியும், நாவலர் அமிர்தலிங்கமும், யோகேஸ்வரனும், முகுந்தனும், சிறீ சபாரத்தினமும், பத்மநாபாவும், யோதீஸ்வரனும் கொல்லப்பட்ட போது, அவர்களை இழந்த மனைவி மக்களும், உற்றார் உறவினர்களும், நண்பர்களும் கண்ணீர் பெருக்கிய போது - அவர்களோடு சேர்ந்து கண்ணீர் சிந்துவதற்கு எனக்கு உரிமை இல்லையா?
கேள்வி:- துரோகிகளுக்குப் பாராட்டுப் பத்திரம் நீங்கள் வழங்குவதாக ஒருவர் அறிக்கை விட்டிருக்கிறாரே?
பதில்:- உண்மைதான் -துரோகிகள் யார் என்று தெரியாமல் அவர்களுக்கு சில காலம் பாராட்டுப் பத்திரம் வழங்கிக் கொண்டிருந்து விட்டேன்!
இந்திய அரசால் தீவிரவாத இயக்கம் என முத்திரை குத்தப்பட்ட ஒரு இயக்கத் தலைவரை "வீழ்த்தப்பட்ட வேங்கை" என தலைவர் அவர்கள் விளிப்பது எதற்காக யாருக்காக.
காலத்திற்கு ஏற்றாற்போல் 'அரசியல் வசனங்கள்' மாறுகின்றன. இதில் இலங்கை விஷயமும் விதிவிலக்கல்ல.
காலத்திற்கு ஏற்றாற்போல் 'அரசியல் வசனங்கள்' மாறுகின்றன. இதில் இலங்கை விஷயமும் விதிவிலக்கல்ல.
No comments:
Post a Comment