இன்று இந்திய ஸ்ரீலங்க அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டியை நீங்கள் தூர்தர்ஷனில் காணத் தவறியிருந்தால்.... ஒரு அழகான கவித்துவக் காட்சியை நீங்கள் miss செய்தீர்கள் என அர்த்தம்.
சற்றே பின்னோக்கி....
அது ஆட்டத்தின் கடைசிப் பந்து. வெற்றி பெற நான்கு ரன்கள் தேவை. அந்த அதிவேகப் பந்து வீச்சாளர் பந்து வீச முதல் அடி வைக்க, அணியின் ஆல்ரவுண்டர் கேப்டன் கையை உயர்த்தி ஏதோ சொல்லி அருகில் வருகிறார். இரண்டு பீல்டர்கள் உடன் சேர்ந்து அங்கு ஒரு சின்ன டிஸகஷன். பின்னர் கேப்டன், பீல்டர்கள் அவரவர் இடம் போக; இந்தியாவின் 75 கோடி மக்களும் இதயம் தடதடக்கப் பார்த்துக்கொண்டிருக்கும் அந்தக் கடைசிப் பந்து வீசப்படுகிறது.
"சிக்ஸ்"
எதிர் அணியின் favorite ஆடுகளத்தில்; ஷார்ஜாவில் நடந்த அந்த இறுதிப்போட்டியை எந்த ஒரு கிரிக்கெட் ரசிகனும் வாழ்வில் மறக்க மாட்டான்.
பந்து வீசியது: சேத்தன் சர்மா.
சிக்ஸ் அடித்தது: ஜாவித் மியான்தத்
இருபத்தி மூன்றரை வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வரலாறு திரும்பியது.
அது ஆட்டத்தின் கடைசிப் பந்து. வெற்றி பெற ஐந்து ரன்கள் தேவை. அந்த அதிவேகப் பந்து வீச்சாளர் பந்து வீச முதல் அடி வைக்க.....
...... அதே தூர்தர்ஷனின் கேமரா, இன்று நான்காவது அம்பயராக ஸ்டுடியோவில் அமர்ந்திருந்த சேத்தனை கவர் செய்கிறது. சேத்தன் ஏனோ விழி விழியென விழிக்கிறார்.....
....பந்து வீசப்படுகிறது, ஒரு ரன் எடுக்கப்பட, ஒரே நாளில் 800 ரன்களுக்கு மேல் ஸ்கோர் செய்யப்பட்ட அந்த ஒரு நாள் போட்டியில் ஸ்ரீலங்காவை இந்தியா வெல்கிறது....
...மீண்டும் கேமரா நான்காவது அம்பயர் அறைக்குச் செல்கிறது. சேத்தன் தலை கவிந்து ஏதோ யோசனையில் இருக்கிறார். அவர் பார்வை காமெராவை புறக்கணிக்கிறது.
தூர்தர்ஷன் கவிதை.....!!!
No comments:
Post a Comment