Dec 13, 2009

கரிகாலன் கால் கருப்பா?

"கரிகாலன் காலப்போல கருத்திருக்குது குழலு...
குழலில்ல குழலில்ல தாஜ்மஹால் நிழலு..."


(முழுப்பாடலுக்கு) (பாடலைக் கேட்க)

சமீபத்தில் வந்த பாடல்களில் A, B, C என எல்லா சென்டர் ரசிகசிகாமணிகளையும் தலையசைக்க வைத்திருக்கும் பாடல் இது. Peppy-யான குத்துப்பாடல் என்றாலும் விஜய் ஆண்டனி வழக்கம் போல் பாடலில் ஒரு அழகான மெலடி சேர்த்திருக்கிறார். பாடலின் இசை ரோலர் கோஸ்டர் போல ஏற்ற இறக்கத்தோடு கிறங்கடிக்கிறது என்றால், பாடலின் வரிகள் கேள்வி பதில் வகையில் பாடலுக்கு அழகிய சுவை.

பாடல் (கவிஞர் கபிலன்), தமிழ் கூறும் நல்லுலகிற்கு "குழல்" என்ற வார்த்தைக்கு "கூந்தல்" என்பதுவும் ஒரு பொருள் என நினைவுப்படுத்துகிறது. மேலும், கரிகாலன் கால்நிறம் குறித்த விவாதத்தையும் நினைவுப்படுத்துகிறார் கபிலன்.

கரிகால் வளவன் என்று அழைக்கப் பட்ட கரிகால் சோழன் (இவர் பொன்னியின் செல்வனில் வரும் ஆதித்த கரிகாலன் அல்ல) காலின் நிறம் குறித்து இருவித கருத்துக்கள் உண்டு.

- கரிகாலன் போர் ஒன்றில் ஈடுபட்ட போது, எரிந்த அரண்மனையில் இருந்து வெளியேறும் முன் அவன் கால் எரிந்து கரியின் நிறமானது முதல் கருத்து.
- "கரி" என்றால் தமிழில் "யானை" என்று ஒரு பொருள். கரிகாலன் யானையின் கால்களைப் போல் பலமான கால்களைக் கொண்டவன் என்றும் ஒரு கருத்து உண்டு.

ஆக, முதல் கருத்தை வழிமொழியும் வகையில்தான் கபிலன் பாடல் இயற்றி இருக்கிறார். Okkay sir....!!!

4 comments:

baskar said...

அடுத்த கேள்வி.
அந்த அம்மிணியோட குழலு எந்த வகையிலே தாஜ் மஹால் நிழலாட சேர்த்தி?
குழப்புராங்களே!

Giri Ramasubramanian said...

கபிலனின் கற்பனைக் காதலியின் கூந்தல் நிறம் "தாஜ்மஹாலின் நிழல்" போல. அவர் அனோஷ்காவை பற்றி எழுதவில்லை எனக் கொள்வோம். இல்லாங்காட்டி, அந்த அம்மா கூந்தல் அப்படி இருந்தா நல்லா இருக்கும்னு நெனச்சிருப்பார்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

||கரிகாலன் போர் ஒன்றில் ஈடுபட்ட போது, எரிந்த அரண்மனையில் இருந்து வெளியேறும் முன் அவன் கால் எரிந்து கரியின் நிறமானது முதல் கருத்து.
- "கரி" என்றால் தமிழில் "யானை" என்று ஒரு பொருள். கரிகாலன் யானையின் கால்களைப் போல் பலமான கால்களைக் கொண்டவன் என்றும் ஒரு கருத்து உண்டு.||

இரண்டுமே தவறான கருத்து.

கால் எரிந்தால் கரி ஆகாது;தீய்ந்து விடும் !
யானை போல் காலிருந்தால் அடுத்த எட்டு எடுத்து வைக்க ஆறு மாதமாகி விடும் !

கரிகாலன் ஆண்ட இடைக்காலத் தமிழகத்தில் மன்னர்களிடேயை பல விதமான படைகள் இருப்பினும் போருக்கு இன்றியமையாததும் முக்கியமானதுமான படை யானைப் படையே..அதுவே பகைவர்களின் கோட்டைச் சுவர்களை உடைக்கவும் அகழிகளைத் தூர்க்கவும் போர்களை வெற்றி கொள்ளவும் உறுதுணையாக இருந்தன.

யானைப் படையின் அளவை வைத்துதான் படை வல்லமையும் மன்னனின் வலிமையும் தீர்மானிக்கப்பட்டன.

பகைவர்களின் யானப் படைகளுக்க எமனாக விளங்கிய காரணத்தால் கரிகாலனுக்கு அப்பெயர் விளங்கியது.

Giri Ramasubramanian said...

@ அறிவன்#11802717200764379909

மிக்க நன்றி! நான் பள்ளி படித்தபோது இவை இரண்டையும் அவன் பெயர்க் காரணமாக வாசித்த நியாபகம். அதனால் அப்படி எழுதினேன். நேரமெடுத்து கருத்து உரைத்தமைக்கு மீண்டும் நன்றிகள்!

Related Posts Plugin for WordPress, Blogger...