கடந்த ஞாயிறன்று சென்னையில் இண்டி ப்ளாக்கர் தளத்தினர் சென்னை வலைப்பதிவாளர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.
சென்ற ஆண்டைப் போலவே இருந்தன ஏற்பாடுகள். டாடா மோட்டார்ஸ் ஸ்பான்சர்ஷிப்பில்தான் இந்தக் கூட்டம் ஏற்பாடு ஆகியிருந்தது எனவே, இந்தமுறை கூடுதலாக ”டாடா க்ராண்டே”வுக்கு விளம்பரம் கனஜோராக நடந்தது. சுமார் 250 பேர் கூடின நிகழ்வில், ஒரு சில பதிவர்களுக்கு ரேண்டமாக சுயஅறிமுக வாய்ப்பு தந்தனர்.
Mingling / High Tea அற்புதமாக இருந்தது. ஹை டீ என்றார்களே தவிர அது ஹை டிஃபன் ரேஞ்சுக்கு இருந்தது. Mingling’கின் போது வாங்கிய ஆட்டோக்ராஃப்கள் சுவாரசியமானவை. மற்றபடி, தமிழ் பதிவுச்சூழலில் இப்போதைய பரபரப்பு “டாபிக்”கான அந்த க்ரூப் டிஸ்கஷன் தவிர்த்து வேறேதும் சுவாரசிய கண்டெண்ட் இருந்ததாக நான் உணரவில்லை.
டோண்டு ராகவன், ஜாக்கி சேகர், கேபிள் சங்கர், பிலாசபி பிரபாகரன், கேஆர்பி.செந்தில் போன்றோரை முதன்முறையாக சந்தித்தேன். அன்பர்கள் டாக்டர்.ராஜ்மோகன், கார்க்கி, யுவா, அதிஷா, கோகுல், ராஜேஷ் பத்மன் ஆகியோரும் வந்திருந்தனர். நண்பர் நட்பாஸை முதன்முதலில் சந்தித்தது மிக்க மகிழ்ச்சிகரமான தருணம். என்னைப் பொறுத்தவரையில் இந்த சந்திப்புகள்தான் இண்டிப்ளாக்கர் மீட்டின் சிறப்பம்சம்.
நண்பர் கோகுல் ஆழ்சிந்தனாவசத்தில் சிக்குண்டிருந்தபோழ்து.
நட்பாஸ் என்னும் களிமண்கலயம் என்னும் நன்_ட்ரி அவர்கள்
மறக்காமல் க்ரூப் ஃபோட்டோ எடுத்துக் கொண்டோம். டீ.ஷர்ட் ஒன்று இலவசமாக எல்லோருக்கும் தரப்பட்டது. விடை பெற்றுக் கொண்டோம்.
கடைசியாக, அந்தப் பரபரப்பு விவாதம் குறித்து கூட்டத்தில் கலந்துகொண்டவன் என்ற முறையில்....
“நாம் நம் தனிக் குணத்தை இதேபோல் காட்டிக் கொண்டிருந்தால், அடுத்தமுறை இண்டிப்ளாக்கர் போன்றோர் இதுபோன்ற கூட்டங்களை ஏற்பாடு செய்வது சாத்தியம் இல்லை. பிரச்னை எழுப்பும் நமக்கு அதுதான் குறிக்கோள் என்றால், யெஸ்! நாம் ஜெயித்தாற்போல்தான்.
என்னைப் பொறுத்தவரையில் இந்தப் பதிவின் நான்காம் பத்தியை நான் மிஸ் செய்வேன். வேறேதும் நட்டமில்லை”
5 comments:
நானும் கலந்து கொண்டேன் நண்பரே நல்ல பதிவு
இன்டிப்ளாக்கர் குறித்த பதிவு
இண்டிப்ளாக்கரின் கலந்துரையாடல் மற்றும் புகைப்படங்கள்
http://www.gouthaminfotech.com/2011/10/indiblogger-tata-grande-meetings-photos.html
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறார்கள் என்பது கேபிள் சங்கரின் வலைப்பூவில் அவர்கள் வெளியிட்டுள்ள பின்னூட்டத்திலேயே தெரிகிறது...
தமிழ் வலைபூக்களை எப்படி இன்டிப்லோக்கேரில் ஒழுங்காக வரைபடுத்துவது என்பதை தெரிந்து கொள்ளவே அவர்கள் அந்த செயலை செய்திருக்கிறார்கள்...
அகந்தை, தங்களுக்கு தெரியவில்லை என்று ஒத்துக் கொள்ள முடியாததை வேறு விதமாய் வெளிபடுத்தி சிக்கி கொண்டார்கள் என்பதே கேபிள் ஷங்கரின் பதிவும் அதற்க்கு வந்த பின்னூட்டங்களும் தெரிவிக்கின்றன...
ஒன்னும் தப்பில்லையே என்று சென்று சென்று தான் இரு குடும்பங்கள் நம் பணத்தை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறது... சூடு சுரணை உள்ள மனிதனாய் நாம் என்று மாறப் போகிறோமோ...
@SuryaJeeva
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
என் மனதில் சரி எனத் தோன்றிய என் கருத்தைத்தான் நான் முன்வைத்தேன். அது சரிதான் என இப்போதும் சொல்லுவேன்.
வேறேதும் இங்கே விவாதமாக விரிவுபடுத்திப் பேசவேண்டாம் என எண்ணுகிறேன்.
மிக்க நன்றி!
@ வடிவேலன்
மிக்க நன்றி தலைவா! :)
நல்ல பதிவு நண்பரே .
இண்டிப்ளாக்கரின் புகைப்படங்கள்
இண்டி ப்ளாக்கர் மீட் 2011"
Post a Comment