Jan 13, 2013

புத்தக விழாவில் நம் புத்தகம்

இந்தமுறை சென்னை புத்தகவிழாவில் கடை விரித்திருக்கும் ஐநூற்று தொண்ணூற்று மூன்று ஸ்டால்களிலும் “கார்பரேட் கனவுகள்” புத்தகம் ஸ்டாலுக்கு ஆயிரம் காப்பிகள் என்ற மேனிக்கு அடுக்கி வைத்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்றமுறை போல மக்கள் ஒன்றிரண்டு ஸ்டால்களில் முண்டியடித்து நம் புத்தகத்தை வாங்குவதற்காக வேட்டி கிழிப்புகளில் ஈடுபட்டு மற்ற புத்தகர்களின் யாவாரத்தைக் கெடுத்த நிலைமை மீண்டும் வாராது தவிர்க்கவே இந்த ஏற்பாடு.


அந்த ஐநூற்று தொண்ணூற்று மூன்றில் 590 கடைகளில் புத்தகம் தீர்ந்துபோய் யாவாரிகள் கைவிரித்தாலும் கீழ்கண்ட மூன்று ஸ்டால்களில் “கார்பரேட் கனவுகள்” கட்டாயம் கிடைக்கும் என்று உறுதி சொல்கிறேன்.

அருணோதயம் - ஸ்டால் எண்: 392 & 393

செல்வ நிலையம் - ஸ்டால் எண்: 23

புத்தகப் பூங்கா - ஸ்டால் எண்: 137


புத்தகத்திற்கு என்.சொக்கன் எழுதிய அணிந்துரை இங்கே

பிகு: புத்தகம் வாங்கிவிட்டு கடையின் வாசலிலேயே நின்று படித்தல், அங்கேயே உட்கார்ந்த வண்ணமோ அல்லது வீடு போகும் வழியில் காரை / பைக்கை ஓட்டிய வண்ணமோ எனக்குக் கடிதம் எழுதும் காரியங்களைத் தவிருங்கள்.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

6 comments:

இராஜராஜேஸ்வரி said...

அருமையான கனவுகள்...

இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

Sowmya said...

Hi Giri,

I'm so eager to read ur book.For that Only i visited Book Fair.But whichever stall I enquired they told me that they are not aware of the book[ Sorry to say this].I left with empty handed.If you are sure about the availability of the book at Book fair,i'll visit tomorrow and will get the book.

Giri Ramasubramanian said...

@ இராஜராஜேஸ்வரி

மிக்க நன்றிங்க. உங்களுகும் என் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்

Giri Ramasubramanian said...

@ Sowmya

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இப்படி ஒரு வாசகியா (!!!) ???

நேத்தே மூணு லட்சத்தி சொச்சம் புக்கும் வித்துட்டதா சொல்றாய்ங்க.

அதனால மத்த ஸ்டால்கள்ல ட்ரை பண்ணாம ஸ்டெய்ட்டா நான் குறிப்பிட்டிருக்கற மூணு ஸ்டால்ல மாத்திரம் ட்ரை பண்ணவும்.

புத்தகத்துக்கான உங்க விமர்சனத்தையும் மறக்காம மறுக்காம அனுப்பவும்.

அட்வான்சு நன்றிகளூ

தமிழ்மகன் said...

விண்டோஸ் 8 சிஸ்டம் டிப்ஸ் -

http://mytamilpeople.blogspot.in/2013/01/windows-8-tips.html

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள்.

Related Posts Plugin for WordPress, Blogger...