சமீபத்தில் வால்பாறை சென்று வந்த என் நண்பர்கள் கொண்டு வந்த அனுபவம் என் புருவங்களை உயர்த்தச் செய்தது. அவர்கள் அனுபவம் என்று சொல்வதைவிடஅனுபவத்தில் கொண்டு வந்த செய்தி எனலாம்.
காரில் பயணம் செய்த மூவரில் இருவர் அட்டையின் (Leech) கடிக்கு இலக்காகி ரத்தம் சொட்ட சொட்ட நனைந்த கால்களுடன் காருக்கு வெளியே குதித்து, சூழ்நிலை முழுவதும் புரிந்து இது அட்டைக் கடித்தான் என்று அவர்கள் உணர சற்று நேரம் பிடித்திருக்கிறது. கடித்த அட்டைப்பூச்சிகளில் ஒன்றை மட்டுமே அவர்கள் காரில் சீட்டுக்கு அடியில் கண்டு பிடித்தார்கள். இன்னொன்று பற்றிய தகவல் இல்லை. அவர்கள் இருவருக்குமே நிற்காமல் கால்களில் ரத்தம் வடிந்ததே தவிர, கொஞ்சமும் வலி இல்லை.
