சென்னை திருவெற்றியூரில் பிரபல குழந்தைகள் நல மருத்துவர் ஆ.ச.கந்தன் அவர்கள். தமிழ் இலக்கியத்தின்பால் பெரும் ஆர்வம் கொண்டவர், நிறைய கவிதைகள் படைத்திருக்கிறார், நையாண்டி மேளம் என்னும் கவிதைப் புத்தகத்தை எழுதியுள்ளவர், பல கவியரங்க மேடைகளுக்குப் பெருமை சேர்த்தவர். அவர் எனக்கு எழுதிய கடிதத்தைப் மிக்க பெருமையுடன் என் வலைமனையில் பதிவு செய்து வைத்துக் கொள்கிறேன்.
அன்புள்ள கிரி,
உங்கள் கார்பரேட்கனவுகள் ஒரு நவீனசாராரின் வாழ்க்கைமுறையை பதிவுசெய்தது, வெகுசுவையாகவே !
உங்கள் வலைப்பூவில் நுழைந்தபோது உங்கள் உயரம் வியப்பினை ஏற்படுத்தியது. கனிணி இலக்கியநுட்பமும் வியாபகமும் கொஞ்சம் மிரட்டுகிறது. கனிணியில் அதிக பரிச்சியம் இல்லாத எனக்கு இங்கே என்வரையிலான நுழைவாயிலும் பிரயாணமும் பிடிபடவில்லை. ஆசிரியரும் கைபிடித்து நடத்த வழிகாட்டியும் தேவைப்படும் போலிருக்கிறது
உங்கள் தமிழ்கிரிவலம் தொடரட்டும்;
உங்களைச்சுற்றி-
வாசகர்'கிரி'வலம் வளரட்டும் !
அன்புடன்
ஆ ச கந்தன்
அன்புள்ள டாக்டர்,
தங்கள் அன்புக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிகள் பல.
வீட்டில் கம்ப்யூட்டர், சின்ன வயசிலிருந்து படித்துப் பரிச்சயமான தமிழ் இவையிரண்டுக்கும் இடையே இணைப்பு தந்தபோது உருவானதுதான் என் வலைமனை. அங்கே எழுதியவைகளை ஒரு பேரன்பு கொண்டவர் துணையோடு தொகுத்தபோது அது புத்தகமாகிவிட்டது.
உண்மையிலேயே இவற்றைப் பொழுதுபோக்காகவே செய்துவரும் எனக்கு இவற்றில் உயரம் எனக் கண்டு பெருமைகொள்ள ஏதுமில்லை.
கணினித் தமிழ் பழகுதல் கடினக் காரியமில்லை. நாம் நேரில் சந்திக்கையில் ஓரிரு வகுப்புகள் நானே உங்களுக்கு எடுக்க சித்தமாக உள்ளேன். சித்தம் = பாக்கியம் இல்லை. வகுப்புகளுக்குத் தனிக் கட்டணங்கள் உண்டு.
அன்புடன்
கிரி ராமசுப்ரமணியன்
2 comments:
அருமையான கடிதம்.
வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றி !
Post a Comment