நேற்று மாலை நம் இல்லத்தில் ட்விட்டர் நண்பர்களுடன் ஒரு ட்வீட்-அப்’ற்கு ஏற்பாடு செய்திருந்தோம். நாலரை மணிக்கு சந்திப்பதாகச் சொல்லியிருந்தாலும் நம் இல்லத்தை அனைவரும் தேடிக் கண்டுபிடித்து செட்டில் ஆக ஐந்தரை ஆகிவிட்டது.
கார்க்கி(@iamkarki) , செந்தில்நாதன் (@senthilchn), கிருஷ்ணகுமார் (@chinnapiyan), ராஜேஷ் பத்மன் (@rajeshpadman), அர்ஜூன் (@vedhalam), நடராஜன் (@nattu_g) , சதீஷ் (@omakuchchi) , ரவி (@pachaithamizhan) , ராஜன் (@jill_online) , பிரகாஷ் (@f5here) என ஜமா களைகட்டியது.
”வருவேன்” என்று சொல்லிவிட்டு, கடைசிநேரத்தில் ‘கடுக்காய்’ கொடுத்த கிருஷ்ணகுமார் (@iKrishS), கோகுல் (@rgokul), நரேன் (@narain), அஸ்லாம் (@4mak), கிரிகேசவன் (@girikesavan), பிவிஆர் (@to_pvr) ஆகியோரைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு பேசத் துவங்கினோம்.
திருமாறன் வந்திருந்தபோது நடந்த ட்வீட்-அப் அனுபவத்தில் ராஜேஷிடம் ஜாக்கிரதையாகவே இருந்து வந்தவன் கடைசியில் அவர் ஓங்கிவிட்ட ஒரு குத்தில் மூக்கை உடைத்துக் கொண்டேன். ஆனாலும் மனிதர் அசராமல் எட்டு திசைகளிலும் சச்சின் ஸ்டைலில் சிக்ஸரும் ஃபோரும் அடித்து எல்லோர் மூக்கையும் உடைத்துக் கொண்டிருந்தார், குறிப்பாக அர்ஜூன்தான் நேற்று ராஜேஷின் டார்கெட், கொஞ்சமாய் பிரகாஷும் மாட்டினான்.
லட்டு, பாதுஷா, ஸ்பெஷல் மிக்ஸர், காஃபி, 7அப் என அவ்வப்போது வயிற்றுக்கும் ஈயப்பட்டது (வராதவங்க வயிறெரிஞ்சு போங்க).
கார்க்கிக்கு கல்யாணம் இருந்ததால் (!!!) அவர் சீக்கிரமே புறப்பட்டுவிட்டார். அதனால் அவருடைய ப்ராண்டட் மொக்கைகளை ரசிக்கும் பாக்கியம் இழந்தோம்.
சீனியர் ட்வீட்டர்கள் செந்தில் சாரும் கிருஷ்ணகுமார் சாரும் (@senthilchn & @chinnapiyan) லேட்டாய் லேட்டஸ்டாய் வந்தார்கள். சின்னப்பையன் என்று ஹேண்டில் வைத்துக் கொண்டு இருப்பவர் 62 வயதுக்காரர் என்று சென்னை மக்கள் இன்றுதான் அடையாளம் கண்டுகொண்டோம்.
செந்தில் சாரை இப்போதுதான் முதல்முறை சந்திக்கிறேன். சொந்த அலுவலில் ரொம்பவே பிஸியாக இருந்தாலும் நேரம் கடந்தும் பிடிவாதமாக வந்துசேர்ந்த அவர் காட்டிய “நட்புக்கு மரியாதை” நம்மில் பலர் கற்றுக்கொள்ள வேண்டியது.
அர்ஜூன், நட்ராஜ், பிரகாஷ் மூவருடனும் நான் நிறையவே சந்தித்திருப்பதால் they are as usual to my eyes.
ஜில்_ஆன்லைன் - இந்த மனிதர்தான் என்று உங்கள் முன் யாரும் சூடம் ஏற்றினாலும் ஒப்புக்கொள்ளமாட்டீர்கள் என்னும் ரேஞ்சுக்கு இருந்தார் ராஜன். இவர் அடிக்கும் ட்விட்டுக்கும் நேரில் சந்திக்கும் மனிதருக்கும் சம்பந்தமே இல்லை.
பச்சைத்தமிழரும், ஓமக்குச்சியும்கூட நிறைய பேசவில்லை. அப்சர்வேஷன் பார்ட்டிகள் :))
மற்றபடி மற்றவர்கள் நிறைய பேசினோம்... நிறைய நிறைய பேசினோம்... மறக்காமல் இலக்கியம் பேசினோம், ட்விட்டர் அடிதடிகள் பற்றிப் பேசினோம், கூகுள் பஸ் மூடப்பட்டதால் இழந்தவைகள் குறித்துப் பேசினோம், பேயோன் யார் என்ற டாப்பிக்கும் வந்தது.
இடையிடையே மடிப்பாக்கத்திலிருந்து வீட்டம்மணி அழைத்துக் கொண்டேயிருந்தார். “எப்போ வருவீர், எப்போ வருவீர்”, என்று. வீட்டில் ”சப்பாத்தி டிஃபன்” என்று முதல் அழைப்பிலும், “வீட்டுல சப்ப்ப்ப்ப்பாத்த்த்த்த்தி டிஃபன்ன்ன்ன்ன்”, என்று இரண்டாம் அழைப்பிலும்....இன்னமும் அழுத்தம் தந்து மூன்றாவது அழைப்பிலும் சொன்னதும்தான் நம் மரமண்டைக்கு, ‘அடடே, சப்பாத்தி மாவு நாமதான் உருட்டணும்போல”, என்று உரைத்தது. களை கட்டிய ஜமாவின் இடையே, “வூட்டுக்குப் போவணும்”, என்று எப்படிச் சொல்ல என கைபிசைந்து கொண்டிருந்தபோதுதான் ஒரு புண்ணியவான் தானே வந்து மாட்டினார்.
“தல, நீங்க ஒரு பாட்டு பாடுங்க....”
பழைய காலத்து வில்லன் ஸ்டைலில் உள்ளே சிரித்துக் கொண்டேன்.... ஹஹ்ஹஹ்ஹஹ்ஹஹஹ்ஹா....
“பாடிட்டாப் போச்சி”
நன்றி: ரவி
10 comments:
Hilarious write up of a tweetup! You guys had fun :)
amas32
Paatum super:)
amas32
சுவாரசியமான பதிவு. சந்திப்பு முழுவதையும் வீடியோ எடுத்து போட்டிருந்தால் கலகலப்பாக இருந்திருக்கும் :)
:)
சூப்பர்.
வாழ்த்துகள் சார்!
வாழ்த்துகள் கிரி.
அனைவருக்கும் நன்றிகள் :)
nice...
தல உங்களை சந்திக்க கிடைத்த வாய்ப்பை நழுவவிடுவோமா...
உங்கள் பாட்டையெல்லாம் கேட்டு ஓடவில்லை... பாவம் உங்க வீட்டம்மாகிட்ட உங்களை அடி வாங்க வைக்க வேண்டாம் என்ற நல்லெண்னத்தில்தான் கிளம்பினோம்...
அன்றைய ஆச்சர்யங்கள்.. Chinnapaiyan, rajeshpadman. Omakuchchi இவரையும் இதுதான் முதல்முறை சந்திக்கறேன்.. :) pachaithamizhan இவரிடம் இன்னமும் பழக வேண்டும்..
ரவி உங்க Bike Riding அருமை... வெகு நாட்களுக்கு பின் ஒரு பில்லியன் ரைட் நம்பிக்கையுடன் அத்தனை வேகத்தில்..
நான் வந்து கலந்து கொள்வேன் என்று நிச்சயமாக எனக்கே தெரியாது. சில பல வேலைகளை ஒத்திபோட்டு விட்டு, சும்மா ஒரு பத்து நிமிஷம் இருந்திட்டு போலாம்னுதன் வந்தேன். உங்கள் உபசரிப்பும் நண்பர்களின் உரையாடல்களும் என்னை மிகவும் கவர்ந்தன.நேரமின்மை காரணமாகவும் 2 நாட்கள் ஜுரம் காரணமாகவும் என்னால் முழுமையாக இன்வால்வ் செய்துகொள்ள முடியவில்லை. பாடலை மிஸ் பண்ணிவிட்டேன்.26 ஐ 62 என்று தவறாக குறிப்பிட்டு விட்டீர்கள். இனி எங்கனம் நான் கூச்சமில்லாமல் கீச்சுவேன்? இது உங்களுக்கே ஞாயமா?
Post a Comment