ட்விட்டரில் நாம் கிறுக்கியது....இவை காற்றோடு கரைந்திடக் கூடாதென இங்கேயும் பகிர்ந்து தொலைக்கிறேன்.........
நீ சிரித்தபோது சிதறும்
சில்லறை
சிங்கிள் டீக்குத்தான்
போதுமாய் இருக்கிறது
கொஞ்சம்
பலமாய்ச் சிரித்து
தொலையேன்.
நாஸ்தாக்கு நேரமாச்சு
தக்காளிச் சட்னி
அரைத்த
உன் கையில்
வீசும்
வெங்காய வாசம்
நம் காதல்
பரவசப்பட்டவனுக்குப்
பருக்கள் வரும்
என்பவனுக்கா புரியும்
காதலிப்பவனுக்கு
கவிதை வரும்
என்பது
உன்
சிக்குப் பிடித்த
கூந்தலை
நான் பிராண்டும்
வேளைகளில்
நீ அலறும்
ஆ'வோசையில்
என் ஆயாவைப்
பார்த்தேனடி
என் மீதான
கோபத்தில்
முருகனுக்கு
நீ மூணாவது
சம்சாரமாகிப்
போனதில்
நியாயம்தான் என்ன?
சேலை அணிந்தவளே
உன் செந்தாமரைக்
கால்சுமந்த செருப்பு
செருகிக் கொண்ட
செம்மண் சேறினிலே
செடி ரெண்டு
செத்துருச்சே
உன்னால் முடியும் ஒன்று
உன்னால் முடிவதனால்
என்னால் முடிவதில்லை
உன் மலிங்காத்தன
மாங்காயடி
யார்க்கர் பார்வையில்
மரணித்து
எழுகிறேன் நான்
1 comment:
தனித் தனி மொக்கைகளைச் சேர்த்து சரமாக்கி, பொறுமை திலகங்களாகிய எங்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கீரீகள். வாழ்த்துடன் நன்றி :-)
amas32
Post a Comment