May 3, 2012

வாத்தியாருக்கு....


ரத்னவேலு ஐயா தன் தளத்தில் வாத்தியாருக்கு எழுதிய கடிதம் பற்றியும் அதற்கு வாத்தியார் எழுதிய பதில் கடிதம் குறித்தும் எழுதியிருக்கிறார், வாத்தியாரின் பிறந்தநாள் நினைவாக. அதற்கான இணைப்பு இங்கே

இன்று வாத்தியாரின் 76’ஆவது பிறந்தநாள்! ஸ்ரீரங்கத்துத் தேவதைகள், ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் புத்த்கங்களிலிருந்து ஒன்றிரண்டு அத்தியாயங்கள் இன்று அவசியம் வாசிக்க வேண்டும். ஏதேனும் எழுத டக்’கென இன்ஸ்பிரேஷன் அமையும்.

வாழ்த்துகள் வாத்தியாரே! நீர் உம் புத்தகங்கள் வாயிலாக எம்மோடுதான் இருக்கிறீரய்யா!

3 comments:

வெங்கட் நாகராஜ் said...

வாத்தியாருக்கு வாழ்த்துகள்.

பல எழுத்தாளர்களுக்கு இன்ஸ்பிரேஷனே அவர்தானே.....

Unknown said...

குமுதம் வார ஏட்டில் சில வருடங்களுக்கு முன் சுஜாதா அவர்கள் ஹக்கு ஹபென் முதலான ஜப்பானிய செய்யுள் வடிவங்களை விளக்கி,வாசகர்களை எழுதப்பணித்தார்,இந்தக்கவிதையின் மையக்கருவின் வரிகளை நான் எழுதி அனுப்பியபோது அது சுஜாதா அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு குமுதத்தில் பிரசுரமான கவிதைகளில் ஒன்றாக இடம்பெற்று எனக்கு மகிழ்வையும் பெருமையும் சேர்த்தது;இதோ அந்தக்கவிதை (இதனை தற்புகழ்ச்சி என்று கருதிடவேண்டாம்)

பிரசவ வேதனை

*கருவுற்றாள் மனைவி என்றதுமே
நினைவெல்லாம் அவள் உருவமேயாகி

காலையில் தாமதமாய் கண்விழித்து

நேரத்தே துயில் கொளும்வரை
கண்காணித்து

செலவைக் குறைத்து
சிக்கன உண்டியலில் சேர்த்து

*வயிற்றில் வலியென்றதும்
தன்நெஞ்சில் வலிகொண்டு

ஆட்டோ பிடித்து
மருத்துவமனை சேர்த்து

மருந்துக் கலைந்து
மூட்டையாய் வாங்கிக்கொடுத்து

*வெளியில் காத்திருந்து
வயிறு காய்ந்து

ஒரு வழியாக
ஒரு - வழி - யாக

குழந்தை பிறந்ததுமே
நிம்மதி மூச்சுவிட்டு

*மருத்துவமனை நீங்கும்வேளை

கட்டணப் பணத்தைப்
பெட்டியோடு கொடுத்திட்டு

தாயையும் சேயையும்
வாடகைக்காரினில் சுமந்து

*வீடு திரும்பினால்
வாசலிலே வரவேற்பு ,

நாளைய கேள்வி-

பிரசவம் பெண்ணுக்கு
வேதனை பெண்ணுக்கு மட்டுமா!

Rathnavel Natarajan said...

மகிழ்ச்சி.
வாழ்த்துகள்.

Related Posts Plugin for WordPress, Blogger...