இன்று (13/05/2012) தமிழ் ட்வீட்டர்களின் முதல் மெகா ட்வீட் அப் தமிழகத் தலைநகராம் சென்னையில் அடையாறு யூத் ஹாஸ்டலில் நடைபெற்றது. நினைவில் நின்ற விஷயங்கள் சிலவற்றைப் பகிர்கிறேன்:
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்திருந்தனர். பெங்களூரு, புனே, மஸ்கட் ரெப்ரஸண்டேஷன்களும் இருந்தன.
தமிழ் ட்விட்டருலக மாதர் சங்கப் பிரதிநிதிகளாக Amas (@amas32), சோனியா அருண் (@rajakumaari), சங்கீதா (@geethutwits), ரேணு (@realrenu) ஆகியோர் வந்திருந்தனர்.
நிகழ்வின் நாளன்று பிறந்தநாள் குழந்தையான பரிசல் (@iParisal) நிகழ்ச்சியை நேர்த்தியாக அட்டகாசமாகத் தொகுத்து வழங்கினார். இது நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கியக் காரணம், KudoS பாஸ்!
நிகழ்ச்சி லைவ் ஸ்ட்ரீமிங் முறையில் இணையத்தில் ஒளிபரப்பப்பட்டது.
ஆனந்த விகடன், ஜீ தொலைக்காட்சியிலிருந்து நிகழ்ச்சியை கவர் செய்ய வந்திருந்தனர்.
அன்பர் மீரான் (@karaiyaan) தொகுத்த தமிழ் ட்விட்டர்கள் கையேடு (Tamil Twits தளத்தில் வந்த தகவல்களின் தொகுப்பு) வெளியிடப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் ஒரு காப்பி இலவசமாக வழங்கப்பட்டது.
அன்புத்தம்பி செல்வகுமார் (@selvu) எழுதிய செல்வு எஃபெக்ட்ஸ் புத்தகம் வெளியிடப்பட்டது. @amas32 செல்வகுமாருக்கு சிறப்புப் பரிசு தந்து வாழ்த்தினார்.
கேபிள் சங்கர், சுரேகா மற்றும் ”வாழை” நிறுவனத்தினர் சில உபயோக, சமூக நலத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்கள், விபரங்கள் தனிப்பதிவுகளாக.
நான் ரொம்பவும் எதிர்பார்த்த பலராமனின் (@balaramanL) குறும்படம் தயாராகவில்லை. எனவே முன்பே வெளியான டிரைலர் மற்றும் ஷூட்டிங் சொதப்பல்களை வைத்து ஒப்பேற்றினார்கள். விரைவில் குறும்படம் வெளிவரும் என நம்புவோம்.
நண்பர் கருப்பையா (@iKaruppiah) தன் வழக்கமான 140 எழுத்துக் கவிதையிலிருந்து தாவி இந்த முறை ஒரு நெடுங்கவிதை வாசித்தார். மழையின் சிலிர்ப்பை உணர்தல், ரசித்தல் குறித்தது என நான் உள்வாங்கிக் கொண்டேன்.
அன்பர் ஈரோடு தங்கதுரை (@jesuthangadurai) நின்றமேனிக்கு நகைச்சுவை புரிந்தார் (Stand-up comedy பாஸ்). லைவ்லி அண்ட் லவ்லி. அத்தனை சரளமாக சுவையுடன் பேசுதல் எளிதன்று. அவர் தந்த எழுதுகோலுக்கு நன்றிகள்.
ரவிக்குமார் (@ravikumarMGR) மஸ்கட்டிலிருந்து வந்திருந்த சென்னை விஜயத்தை இந்த ட்வீட்-அப்’ற்கு சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். அவர் நடத்திய மிமிக்ரி நிகழ்ச்சியும், சூரியன் எஃப்.எம். ஆர்ஜே கோபால் (@rjcrazygopa) அவருடன் இணைந்து நடத்திய மிமிக்ரி அதகளமும் அருமை. இருவருக்கும் Amazing talent!
அன்பர் சண்முகம் (@smukam), Amas (@amas32) ஆகியோர் ட்வீட் பயன்பாடு குறித்து தங்கள் கருத்துகளை ரத்தினச் சுருக்கமாகப் பகிர்ந்து கொண்டனர்.
கரோக்கி செய்த சொதப்பல்களுக்கு இடையே நான் கொஞ்சம் பாடினேன் (நான் அறிந்து யாரும் ஓடவில்லை)
நண்பர் பட்டாசு ஒரு மலையாளப் பாடல் பாடினார்.
ஆங்... நண்பர் சென்னிமலை ”அட்ராசக்கை” செந்தில் (@senthilcp) ஒரு சரவெடி கொளுத்தினார். விபரங்களை நான் சொல்லமாட்டேன்.
இறுதியாக சூப், ஜாமூன், ஹல்வா, பிசிபேளாபாத், பஹளாபாத், சப்பாத்தி/குருமா, ஐஸ்க்ரீம், பீடா, மல்லி சாதம் என கலக்கலாக இரவு உணவு.
நிகழ்ச்சியை நல்லமுறையில் நடத்த உழைத்த செந்தில்நாதன் (@senthilchn), மீரான் (@karaiyaan) மற்றும் இந்த ட்வீட்-அப்’ற்கு முதல் விதை விதைத்த சத்யா (@expertsathya) ஆகியோருக்கு தமிழ் ட்விட்டர் நண்பர்கள் சார்பில் கோடி நன்றிகள்.
சில தகவல்கள், நபர்கள் பெயர்கள் விடுபட்டிருந்தால் அது என் நியாபகமறதியின் பலன், மன்னிக்கவும்!
அன்பர் செல்வா எடுத்த புகைப்படங்களின் தொகுப்பு: https://t.co/ESbjKyst
மேலும் சில படங்கள்: http://www.katturai.com/?p=3678
4 comments:
U r the first.weldone
உங்கள் பதிவு நன்றாக இருக்கிறது :)
வாழ்த்துகள்.
//நான் ரொம்பவும் எதிர்பார்த்த பலராமனின் (@BalaramanL) குறும்படம் தயாராகவில்லை//
படத்தொகுப்பு வேலைகள் வரை முடிஞ்சிருச்சு. ஒலிப்பதிவு, இசை இன்னும் பண்ணனும். சொதப்பியதற்கு மன்னிக்கவும். :)))
நான் மிகவும் ரசித்தது மிமிக்ரியும் உங்கள் பாடல்களையும் தான்! நிகழ்ச்சி தொடங்கும் போது அனைவரையும் அறிமுகப்படுத்திக் கொண்டது நன்றாக இருந்தது. @iParisal அண்ணனின் நிகழ்ச்சித் தொகுப்பு அருமை.
@iamkarkiயும் குறும்படம் போடாமல் ஏமாற்றிவிட்டார்.
Post a Comment