நன்றி: http://www.cartoonstock.com
மாடிவீட்டு சுந்தர் வந்தான். கேந்த்ரீய வித்யாலயாவில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான்.
“அங்கிள்! எனக்கு ஒரு நாலு சம் போடணும். ஹெல்ப் பண்றீங்களா?”
“சம்?”
“கணக்கு அங்கிள்”
“ஓ ஷ்யூர்! நான் 1991’லயே பத்தாங்கிளாஸ்ல கணக்குல ஃபர்ஸ்ட் மார்க் எடுத்தவனாக்கும்”
“சூப்பர் அங்கிள். புக் கொண்டு வரவா?”
“இப்போ வெளியே போறேன். சாயந்திரம் அஞ்சு மணிக்கு வாயேன்”
“ஓகே அங்கிள்”
மாலை ஐந்து மணி:
“அங்கிள்”
“வா சுந்தர்!”
“இதான் அங்கிள்”, நோட்டுப் புத்தகத்தை விரித்துக் காண்பிக்கிறான்”
“எது”
“இந்த நாலு சம் அங்கிள்”
“இது நாலா?”
“யெஸ் அங்கிள்”
“திஸ் ஃபோர்?”
“ஆமா அங்கிள்”
“ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா!”
“என்ன அங்கிள்?”
”ட்ட்ட்ட்டமால்.....” (நான் மயங்கி விழுந்த ஓசை)
சுந்தர் காண்பித்த நான்கு கணக்குகளுள் சுமாரேசுமாராய் சுலபமான கணக்கைப் பார்த்தால் நான் மயங்கிய காரணம் உங்களுக்குப் புரியும்...
Prove...
(a+b)^3+(b+c)^3+(c+a)^3-3*(a+b)*(b+c)*(c+a) = 2*(a^3+b^3+c^3-3*a*b*c)
4 comments:
:))))
சூப்பர் பல்பு..
அய்யோ சாமீ .....
innoru damaaaaaaaaaaaaaaaaaaaaaaallllll.
intha damaal naan kiLae viLunthathu samy.
ஹஹஹா!
பின்னூட்ட ஊக்குவிப்பு தந்த அனைவருக்கும் நன்றி!
Post a Comment