நாகராஜுக்கு வாரந்தவறாமல் சனிக்கிழமை விடியற்காலையில் வேலைவிட்டுப் போனால் வெள்ளி ரிலீஸ் சினிமாவை தியேட்டரிலோ, திருட்டுவிசிடி.டாட்.காமிலோ பார்த்துவிட வேண்டும். திங்கள்கிழமை மறவாமல் பார்த்த கதையை இரவு உணவு வேளையில் என்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இந்த வாரம் பார்த்த சினிமாவின் கதை இதுதான்...
முதல்வர் ஒருவர் மீது செக்ஸ் புகார் தந்து அவரைப் பதவி இறக்கி தற்கொலைக்குத் தூண்டி தான் முதல்வர் பதவி ஏற்கிறான் வில்லன்.
“கட்”
டைட்டில்!
டைட்டில் முடிய, ஆயா ஒருத்தி வடை சுடுகிறாள். காக்கா வடை கவ்வுகிறது. பறக்கும் காக்கா வாயின் வடை தரையில் வீழ்கிறது. இப்போது வடை க்ளோஸப்பில். ஷூக்கால் ஒன்று வடையருகே வந்து நிற்கிறது. காலுக்குப் பாத்தியக்காரன் வடையைக் குனிந்து கையில் அள்ளி முகத்தின் முன் வைக்க..... வட்ட வடிவ வடை மேலும் க்ளோஸப்பில். வடைக்குப் பின்னம்பக்கமாக வடை எடுத்தவன் முகம் மறைந்திருக்கிறது.
வடை பிடித்த கை இப்போது வடையைப் பக்கவாட்டில் விலக்க...
... அடடா.... அடடே! நம்ம ஹீரோ ஸ்டைல் என்ற நினைப்பில் “அச்சுப் பிச்சுப்” புன்னகையோடு தரிசனம் தருகிறார்.
வடையைத் தூக்கி எறிகிறார் ஹீரோ.... காக்கா பறந்து வந்து அந்தரத்திலேயே வடையைக் கவ்விப் பறக்கிறது.
கேமரா ஒரு 360 டிகிரி சுற்றுகிறது. நகர மக்கள் பரபரப்பாக இருக்கிறார்கள்.
”மக்கள் பிஸியா இருக்காங்க இருந்தாலும் பசியா இருக்காங்க”, என்று ஏதோ டயலாக் உதிர்க்கிறார் ஹீரோ.
ஜும்க்கு சப்பா ஜும்க்கு சப்பா ஜும்க்கு சப்பா ஜும்க்கு சப்பா....
யெஸ் யூ ஆர் ரைட்.... ஓபனிங் சாங்!
"கந்தா காரவடை முறுக்கு மசால்வடை
ரோட்டுலதான் இட்லிக் கடை
காசில்லன்னா பட்னிக் கட...”
”இதுக்கு மேல கதை வேணுமா?”, நாகராஜ் கேட்க...
“வேணாம்பா ஆள வுடு”, இது நான்.
“அதெப்டி? நாங்க பாத்து அனுபவிச்சோம் நீ கேட்ட் அனுபவி”
”சரி, சொல்லித் தொல”
”பாட்டு முடியுது. அடுத்து ஒரு ஆட்டோ வந்து நிக்குது. ஒருத்தர் காலைக் காட்டறாங்க...”
“காமெடியனா?”
”அட எப்டிப்பா கரெக்டா சொல்ற”
“மேல மேல சொல்லு”
காமெடியனும் ஹீரோவும் ஃப்ரெண்ட் ஆகறாங்க. ஆட்டோவுல போயிக்கிட்டே தன் ஃப்ளாஷ்பேக்கை விரிக்கறாரு ஹீரோ. காரைக்குடி பக்கத்துல கானாடுகாத்தான்ல ஒரு தாத்தா அவருக்கு அரண்மனை மாதிரி வீடு அதுல வேளாவேளைக்கு ஊருக்கே சோறு பொங்கிப் போடறாங்க. அந்த வீட்டுக்கு வருது ஒரு வில்லங்கம், அந்த வில்லங்கத்தை சரி செய்ய பட்டணத்துக்கு வர்றாரு ஹீரோ. அங்க ஒரு அரை டஜன் ஹீரோயினி ஒவ்வொருத்தரா வர்றாங்க. அதுல ஒண்ணு நம்ம ஹீரோவுக்கு அத்தை பொண்ணு. ஒரு ரெண்டு டூயட்டு.
“மேல மேல”
”ஃப்ளாஷ் பேக் முடியுது. நம்ம முதலமைச்சர்தான் ஹீரோவுக்கும் வில்லன். அவருக்கு எதிரா இட்லிக்கடை லேடியை இண்டர்வெல் முடிஞ்சி கவுன்சிலராக்கி, அங்கருந்து மேயராக்கி, அவங்க மூலமா முதலமைச்சர் கண்ணுலயே விரலை விட்டு ஆட்டறாரு ஹீரோ.
“செம்ம செம்ம... மேல மேல”
”ஹீரோவை ஜெயில்ல போட்டுடறாங்க?”
“கஞ்சா கேஸா”
”எப்டி சொல்றா? நீ படம் பாத்துட்டு கதை கேக்கறியோ?”
“இல்லையில்லை, சொல்லு சொல்லு... மேல சொல்லு”
“அங்க அவரு நேர்மையான எதிர்க்கட்சித் தலைவரை பாக்கறாரு”
“அவரை வெளில கொணாந்து இவருக்கு எதிரா நிக்க வெச்சு முதல்வர் ஆக்கறாரா?”
“அது அது அதான்! அவ்ளோதான் படம்”
“கிராமத்து வீடு என்னா ஆச்சு?”
“அதை புது முதல்வர் தன் மொதோ கையெழுத்து மூலமா மீட்டுத் தந்துடறாரு”
”ச்ச..... இதல்லவா உலக காவியம். இந்த படத்து ஒரிஜினல் டிவிடி வந்ததும் சொல்லு”
“எதுக்கு?”
“பன்னண்டு காப்பி வாங்கறேன். பன்னண்டும் எனக்குத்தான். காலத்துக்கும் வெச்சிருந்து பாத்துக்கிட்டே இருப்பேன்”
“ஆமா! படம் பேரு என்னான்னு நீ கேக்கலியே!”
“எதுக்குய்யா? எதுக்கு! அட என்னாத்துக்குன்னேன்! இப்படிப்பட்ட காவியத்துக்கு பேரே வேணாமய்யா!”
7 comments:
சந்தானம் சொல்றாமேரி நெக்கலை அக்குள்ள வெச்சுக்கினு சுத்துறபா..:D
அண்ணன் ரசனைக்காரனா?
அடடே! வாங்கோ வாங்கோ!
நன்றீ நன்றீ!
saguni
அருமை.
நல்லா இருக்கு சார் ! நன்றி !
I too plan to write like this about the movie. I stopped after reading this because i have to learn more...(How all are typing in Tamil?)
கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்.
@அனானிமஸ்
http://www.google.com/transliterate/tamil/
http://t13n.googlecode.com/svn/trunk/blet/docs/help_ta.html
software.nhm.in/products/writer/
இந்த லின்க்குகள் உங்களுக்கு தமிழில் டைப் செய்ய உதவும் என நம்புகிறேன்.
Post a Comment