அறுபத்து நான்கு வார்த்தை அற்புதம்
தமிழ்த் திரைப்பாடல்களில், துக்கடாப் பாடலாக இல்லாமல் ஒரு பல்லவி, இரண்டு சரணங்கள் கொண்டு வரும் முழுப்பாடல்களில், மிகவும் குறைந்தபட்ச வார்த்தைகளைக் கொண்டு படைக்கப்பட்ட பாடல் எதுவாயிருக்கும்?
தமிழ்த் திரைப்பாடல்களில், துக்கடாப் பாடலாக இல்லாமல் ஒரு பல்லவி, இரண்டு சரணங்கள் கொண்டு வரும் முழுப்பாடல்களில், மிகவும் குறைந்தபட்ச வார்த்தைகளைக் கொண்டு படைக்கப்பட்ட பாடல் எதுவாயிருக்கும்?
பழைய திரைப்படப் பாடல்களில் இப்படி நிறைய இருக்கக்கூடும். என்னைவிடப் பழையவர்கள் யாரேனும் அந்த உதாரணங்களை பின்னூட்டத்தில் கூறலாம், ப்ளீஸ்!
நான் அறிந்தவரையில் ஹிந்தியில் சல்மான் நடித்த தேரே நாம் திரைப்படத்தில் (தமிழ் “சேது”வின் ஹிந்திப் பதிப்பு) வரும் “தும் ஸே மில்னா” பாடல் மிகக்குறைவான வார்த்தைகளில் உருவான ஒன்று. ஐம்பது வார்த்தைகளுக்கு சற்றே குறைவாக, அல்லது சற்றே அதிகமான வார்த்தைகள் கொண்ட பாடல். ஹிந்தியில் எனக்கு பந்த்ரா (பதினைந்து) வரைதான் எண்ணத் தெரியும் என்பதால் சரியான எண்ணிக்கையைக் கூறமுடியவில்லை. முஜே மாஃப் கீ ஜியே!
கடல் படத்தின் “மூங்கில் தோட்டம்” நானறிந்த மிகச் சிறிய தமிழ்த் திரைப்ப்பாடல். அறுபத்து நான்கே வார்த்தைகள், மிகவும் எளிமையான கற்பனை. சிக்கலில்லாத நேரடிக் கவிதை... ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் “அற்புதம்”.
கடல் படத்தின் “மூங்கில் தோட்டம்” நானறிந்த மிகச் சிறிய தமிழ்த் திரைப்ப்பாடல். அறுபத்து நான்கே வார்த்தைகள், மிகவும் எளிமையான கற்பனை. சிக்கலில்லாத நேரடிக் கவிதை... ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் “அற்புதம்”.
"வேறென்ன வேணும்; நீ போதுமே!” என்பதுதான் பாட்டின் “தீம்”. இதைச் சுற்றித்தான் பாட்டு பின்னப்பட்டிருக்கிறது.
எனக்கு ரொம்பவும் பிடித்தது அசத்தலான அந்த இரண்டாம் சரணம்...
மரங்கள் நடுங்கும் மார்கழி இருக்க,
ரத்தம் உறையும் குளிரும் இருக்க,
உஷ்ணம் யாசிக்கும் உடலும் இருக்க,
ஒத்த போர்வையில இருவரும் இருக்க..
இது போதும் எனக்கு.. இது போதுமே...
வேறென்ன வேணும்?.. நீ போதுமே..பாடலின் ஒட்டுமொத்த மென்மையை பாடலின் பியானோ ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறார் ரஹ்மான். அவர் நெய்த பொருளின் வண்ணத்தை வைரமுத்து பார்த்துக் கொள்கிறார் என்றால், வடிவமைப்பை அபய் & ஹரிணி கவனிக்கிறார்கள்.
அபய் ஜோத்பூர்கர், ஹரிணி’யின் பொருத்தமான அழகான குரல்கள், வைரமுத்துவின் மயக்கும் வரிகள், ரஹ்மானின் சொக்க வைக்கும் ட்யூன்....
“இதுபோதும் எனக்கு இதுபோதுமே! வேறென்ன வேணும்?”
8 comments:
நதி எங்கே போகிறது
கடலைத் தேடி
நாள் எங்கே போகிறது
இரவைத் தேடி...... என்பது போலவும்,
காற்றசைத்தால் தலைசாயும்
நாணல்
காதல்வந்தால் தலைசாயும்
நாணம்...... என்பது போலவும் நிறையப் பாடல்கள் உள்ளன. நல்லவேளையாக பழைய பாடல்களில் இதுபோன்று நிறைய இருக்கக்கூடும் என்று சமயோசிதமாகச் சொல்லிவைத்துவிட்டீர்கள். மற்றவர்களை ரசிக்கும் முன்னால் கண்ணதாசனைத் தேடுங்கள். இவர்களையும் விட அவரிடம் ரசிப்பதற்கு நிறையக் கிடைக்கும்.
எனக்கு மிக மிக பிடித்தா பாடல்.... எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கும் ஆல்பம்
Ex : 1 "துதி பாடும் துதி பாடும் பாடும் பாடும் டும்டும்டும்..." கேட்டதுண்டா...?
நேரம் கிடைப்பின் தொகுப்பாக பாடல் பகிர்வுகள் வரும்... நன்றி...
யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே பாட்டு சேர்த்தி கிடையாதா?
@இலவச கொத்தனார்
// துக்கடாப் பாடலாக இல்லாமல் ஒரு பல்லவி, இரண்டு சரணங்கள் கொண்டு வரும் முழுப்பாடல்களில்//
:))))
@ அமுதவன்
//நதி எங்கே போகிறது// பக்கா உதாரணம் சார். மிக்க நன்றி.
//மற்றவர்களை ரசிக்கும் முன்னால் கண்ணதாசனைத் தேடுங்கள்//
மற்றவர்களை ரசித்துக் கொண்டே தேடறேனே ;)
@சீனு
:)))
@ திண்டுக்கல் தனபாலன்
கேட்டதில்லையே சார். லின்க் கிடைக்குமா?
Post a Comment