இரண்டாம்
நாள் முழுக்க ரயில் பயணத்திலேயே கடந்தது.
காலை ஒன்பது
மணிக்கு வந்தடைய வேண்டிய நாக்பூரை ஒரு மணிநேரம் தாமதமாகவே வந்தடைந்தது ரயில். ஆகவே,
சற்றே தாமதமான காலை உணவு. ஆனால், அதற்கு முன்னதாக சுமாரான ஒரு நல்ல தேநீரும், நல்லதாய்
நாலு வெரைட்டி பிஸ்கட் பாக்கெட்டுகளும் உபசரிப்பில் ஒரு பகுதியாய்க் கிடைத்த புண்ணியத்தில்
பசி தாங்க இயன்றது.
பயணத்தில் சந்தித்த சிலர் பற்றி:
நிர்மால்யா:
பிரபல எழுத்தாளரும், அகாதமி விருது பெற்றவருமான நிர்மால்யா இந்தப் பயணத்தில் இருந்தார். அவர் வந்திருந்ததை ஓவியர் ஜீவா ஃபேஸ்புக்கில்
சொல்ல, நிர்மால்யா இருந்த இடத்திற்கே சென்று அவருக்கு ஒரு வணக்கம் வைத்துவிட்டு வந்தேன்.
பேராசிரியர்
லஷ்மி: இந்து கல்லூரியில் பேராசிரியரும், எழுத்தாளருமான லஷ்மி. இன்றைய கல்விமுறை குறித்து
இவரிடம் நிறைய உரையாட முடிந்தது.
ஆசிரியர்
பாரதி சதிஷ்ராஜ்: ஏற்காட்டைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரும், எழுத்தாளருமான சதிஷ்
ராஜ். இளரத்தம் தாங்கிய, புதிய சிந்தனைகளுடனான ஒரு துள்ளல் மனிதரை அரசு ஆசிரியராகப்
பார்த்த மகிழ்வை என்னவென்று சொல்ல. தான் சார்ந்த வேதியியல் துறை சார்ந்து புனைவுகளும்,
அபுனைவுகளும் எழுதுகிறார். இவரை வாசிக்க வேண்டும்.
மதுரை முரளி,
இதயம் கிருஷ்ணா, கவிதாயினி கோமளா என இன்னமும் பல கவிதை ஆசிரியர்களும் வந்திருந்தனர்.
நாஞ்சில்
நாடன் முதல் கண்மணி குணசேகரன் வரை, அகாதமி விருது முதல், கவிஞர் இசை வரை விரிவாகப்
பேசும் ரவிக்குமார் எனும் சீனியர் சிட்டிசன் ஒருவர் என் அடுத்த இருக்கையில் இருந்தார்.
வளரும் எழுத்தாளர்கள் + சினிமாக் கனவில் அதற்கு எழுதிக் கொண்டிருப்பவர்கள் சிலரும்
வந்திருந்தனர்.
இங்கே இவர்கள்
தாண்டி ஆச்சர்ய சந்திப்புகள் சில: சிவில் சர்வீஸ் ஆர்வலர்கள், சின்னஞ்சிறு தமிழ் ஸ்காலர்கள்,
எம்.ஏ.தமிழ் மாணவர்கள். மிகவும் ஆச்சர்யம் தந்த சந்திப்பு பண்பரசன் என்ற அரசியல் ஆய்வாளர்
ஒருவர்.
இவர்கள் நான்
அமர்ந்திருந்த பெட்டியின் ஒரு பகுதி மக்கள். மற்றோர் அறிமுகம் அடுத்த நாட்களில் கிடைக்கும்
என நம்புகிறேன்.
நிற்க, காலையில்
நாக்பூர் ரயில் நிலையத்தில் மஹாராஷ்டிரா பாஜக அன்பர்கள் காத்திருந்து இனிய தேநீர் உபசரிப்புடனான
வரவேற்பு தந்தனர். இட்லி, வடை, சட்னி என ஒரு ஓகே ஓகே காலை உணவு. சப்பாத்தி-சாவல்-சப்ஜி
என மதிய உணவு, அதே-அதே இரவுணவு. இடையே ஒரு தேநீர். இதோ தூங்கப் போக வேண்டும். காலையில்
எழுந்தால் காசி வந்திருக்கும்.
No comments:
Post a Comment