Apr 26, 2011

கடவுள், சாத்தான், கடிதம்.

ஜெமோ'வுடனான என் கேள்வி-பதில் அரட்டை அவர் தளத்தில் என் பதிவு ஒன்றுக்கான இணைப்பையும் பகிர்ந்தபடி சமீபத்தில் வெளியானது <http://www.jeyamohan.in/?p=14260>. அங்கிருந்து இங்கு வந்த அன்பர் ஒருவர் கடந்த ஒரு வார காலமாக எழுதிய பின்னூட்டங்கள் இங்கே.


Yavana ruban said...
அன்புடன் ஜெமோவுக்கு,
கடந்த 135 வருடங்களாகவே கடவள் இல்லை, இல்லவே இல்லை என்று ப்ரஸ்தாபிக்கப்பட்டு வருகிற இ ந்தியாவில் எந்த‌
கடவுளர்களும் இல்லாமலேயே அரசாங்கமும் ஸ்தாபிக்கப்பட்டு குறிப்பாக‌
தமிழ் நாட்டில் ஈ.வெ.ரா.(சாத்தானா?) மற்றும் அவரது சீஷர்களான எம்.ஜி.ஆர்.மற்றும் அவரது சஹாக்களும்(பிஸாஸுகளா?) இன்றைய வரையில்
தமிழ் நாட்டின் மாற்றுக் கடவுளர்களாக மற்றும் ஏனைய மதக் கடவுளர்கள் (அல்லா,இயேசுகிறிஸ்து,புத்தா,ராமா,மஹாவீர்) எல்லோருக்கும் மாற்றாகவே ஒரு
சாத்தானின் ராஜ்யத்தை(?) ஸ்தாபித்து(முற்காலத்தில் கடவுள‌ின் ராஜ்யம் அல்லது தேவனுடைய ராஜ்யம் அல்லது ராமராஜ்யம் என்றெல்லாம் வானமென்னும் திரையின் கீழ் இருந்த ஸாம்ராஜ்யத்தை )ஒரு சினிமா திரையில் காட்டப்படும் சினிமா ஸாம்ராஜ்யமாக பொய்மான்கள் ஓடும் ஆரண்யமாக மாற்றிய இந்த‌ 
கலிகாலத்தில் 'யார் கடவுள்,யார் சாத்தான்' என்று 'கிரியும் ஜெமோவும்' தான் என்னைப் போன்ற கிறிஸ்துவர்கள் எல்லாருக்கும் தெளிவிக்க வேண்டும்!

அன்புடன் 
யவன‌ரூபன்.
Yavanaruban said...
கடவுள் யார்?சாத்தான் யார்?

'கிரி மற்றும்ஜெமோ&கோ',
உங்க‌ளுக்கே நன்றாகத் தெரியும் கிறிஸ்துவர்களாகிய எங்களுக்கு கடவுளும் உண்டு! சாத்தான்,பேய் மற்றும் ஏனய பிஸாஸுகளும் (கிறிஸ்துவர்களாகிய எங்களுக்கும் உண்டு!)ஆகிய‌
ஈ.வெ.ரா.மற்றும் ஏனைய அவரது சஹாக்களும் அவர்களது கூட்டாளிகளும் ஸ்தாபித்த'கடவுள் இல்லை;இல்லவே இல்லை 'என்கிற ‌சாத்தானுடைய சாம்ராஜ்ய சிந்தனைகளும் எண்ணங்களும் ஏன் அவர்களது ஆவிகளும் கூட எங்கள் ரோமன் கத்தோலிக்கர்கள்,ப்ரொட்டஸ்டன்டுகள் ஆகியோரைப் பிடித்து ஆட்டிவிடக் கூடாதென்பதில் பென்டகொஸ்தேக் காரர்கள் கொஞ்சம் சற்று தீவிரமாய் உபவாஸித்து,இரவெல்லாம் கண் விழித்து,ஜெபித்து 'ஈ.வெ.ரா.&கோ 'வை

'தூரத் துரத்தி'விட்டுத்தான் தூங்குவது என்று முடிவு செய்து இருக்கிறோம்!

உங்களுக்கு வேண்டுமானால் 'சாத்தானுடன் மற்றும் அவனது ஸஹாக்களுடன்' சமரசம் மற்றும் உடன்படிக்கை ‌செய்து கொண்டு வாழ்வதில் விருப்பம் இருக்கலாம்!

ஆனால் 'பெந்தெகோஸ்தே'காரர்களுக் கு நிச்சயம் சாத்தானுடன் 'ஸமரஸம்'இல்லை;இல்லவே இல்லை!



இதனை 'கிரி மற்றும்ஜெமோ&கோ' அறியக் கடவ தாக!
"ஸஸரிரி" கிரி said...
@யவன ரூபன்
அறிந்து கொண்டோம். நன்றி!

ஜெமோ அவர்களுக்கு ஏதேனும் சொல்லவேணும் எனில் அவர் ஈ.மெயில் முகவரிக்கு எழுதவும். 'தகுந்த' பதில் கிடைக்கும்.
Yavanaruban said...
அன்புடையீர்,'(கிரி மற்றும்ஜெமோ)'
எனது'யார் கடவுள்,யார் சாத்தான்',என்ற கேள்விக்குப்'பதிலும் நானே கேள்வியும்நானே'என்கிற ரீதியிலான ‌எனது விளக்கம்,உங்களைப் 
புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்!அன்பர்'ஜெமோ'அவர்களது' ப்ளாக்குக்கு' நானும் ஒரு சந்தாதாரன் தான்!தற்சமயம் என் ஜிமெயில் கடவுச் சொல் மற‌ந்த போனதால் என்னால் அவரைத் தொடர்பு கொள்ள இயலவில்லை!
ஆயின் எனது முக நூல் பதவில் (ரூபன் டேவிட் வில்லியம்)'கிறிஸ்துவத்தை பற்றி' என்ற தலைப்பில் போஸ்டிங் செய்துள்ள எனது தொடர் விளக்கத்தை காணும்படி அன்புடன் வேண்டுகிறேன்!

/யவனரூபன்!‌ு
Yavana ruban said...
கடவுள் யார்?சாத்தான் யார்?

'மேலும், சாத்தான் என்ற கருதுகோள் அவர்களை அனைத்தில் இருந்தும் விலக்குகிறது. அவர்களின் தரப்பு அல்லாத எதுவும் சாத்தானே. சாத்தான் தர்க்கத்தின் அதிபன். அழகிய வாதங்கள் கொண்டவன். ஆகவே அவர்களிடம் பிறர் விவாதிக்கமுடியாது. ஏனென்றால் நமது தரப்பு எந்த அளவுக்கு நியாயமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அவர்கள் அதை சந்தேகப்படுவார்கள். சாத்தானுக்கு ஆயிரம் முகங்கள்!

சாத்தான் உணர்ச்சிகளை பயன்படுத்துபவன். மனதைக் கரைப்பவன். ஆகவே அவர்களிடம் நாம் கெஞ்ச முடியாது, மன்றாடமுடியாது. உணர்ச்சிகளை காட்டமுடியாது. தாயோ தகப்பனோ கணவனோ மகளோ பேச முடியாது. அவற்றையும் அவர்கள் சந்தேகப்படுவார்கள். ஆம், அவர்கள் சாத்தானின் குரலில் பேசுகிறார்கள்!

அவர்களிடம் அவர்களின் மதத்தைப்பற்றிக்கூட விவாதிக்கமுடியாது. ஏனென்றால் சாத்தானுக்குத்தான் பைபிள் மிக நன்றாக தெரியும். அவன் பைபிளைத் திரிப்பதில் நிபுணன். பைபிளைப்பற்றி வேறுஎவர் பேசினாலும் அவர்கள் சாத்தானே.'

ஜெமோ,அவரது மதமென்னும் வலையில்!


ஆனால் கிரி &கோ,

சாத்தானுக்கு பைபிள் தெரியுமோ எனனவோ,'ராமயாணம். மஹாபாரதம்' நல்லா தெரியும்! (உ-ம்- ஈ,வெ.ரா.&கோ)

இங்கு இந்து தேசத்தில் ம்றுக்கப்பட்ட,மறக்கப்பட்ட மற்றும் மறைக்கப்பட்ட கடவுள், 'ராமனோ,க்ருக்ஷ்ணனோ தான்!'

அவனைப் பற்றி உங்கள் 'ஹராம்' ஹிந்துக்களுக்கு விளக்கம் சொல்லி உங்கள் ஹிந்து ஹராம்களை ரட்சிககப் பாருங்கள்!

உங்கள் பார்ப்பன மானததையும் காப்பாற்றப் பாருங்கள்!

எங்களை ரட்சிக்க எங்கள் கிறிஸ்த்வ கடவுள் போதும்!

தெரிகிறதா?
.
.
.



2 comments:

natbas said...

யவனரூபனின் தமிழ் நடை அவர் பெயரைப் போலவே கிறுகிறுக்க வைக்கிறது சார். வித்தியாசமான தமிழ் நடை. பின்னூட்டத்தில் யாரும் படிக்க வாய்ப்பில்லாமல் அவரது கருத்துகள் முடங்கிக் கிடந்திருக்கும். நீங்கள் அவற்றை ஒரு அழகிய பதிவைத் தொகுத்துத் தந்திருக்கிறீர்கள். மிகவும் ரசித்துப் படித்தேன். மிக்க நன்றி.

Giri Ramasubramanian said...

@நட்பாஸ்
நன்றி!
அவரது கருத்து காணாமல் போய்விடக் கூடாது என்பதற்கெனவே இந்தப் பதிவு.

"மதம் கொத்திப் பறவைகள்" என்று பதிவு எழுத எனக்கு இருந்த உரிமை, அவர் கருத்தைப் பகர அவருக்கு உண்டு என்பதே நான் அவர் பதில்களைத் தனியே பதிவேற்றினேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...