மிஸ்டர் ராஜ்தீப் உங்க பணம் சுவிஸ்'சில் இருக்கிறதா?
நேற்று பாபா ராம்தேவின் உண்ணாவிரதம் குறித்த கவரேஜை ஐ.பி.என்.'னில் காட்டுகையில் ராம்தேவ் & கோ உண்ணாவிரதத்திற்கு வருகை தரும் தன் தொண்டர்களுக்கு (!!) அமைக்கும் 650 தாற்காலிக டாய்லெட்கள் பற்றியும், வருகை புரிபவர்களுக்கு சிறப்பு இயக்க ஷட்டில் சர்வீஸ் பஸ்கள் பற்றியும், டெல்லியில் அமைக்கப்பட்டுவரும் மாபெரும் உண்ணாவிரதப் பந்தலையும் ஏதோ கொள்ளைக் கூட்ட கும்பல்களின் சொத்து விபரங்களை பட்டியலிடுவது போல காட்டினார்கள்.
யோவ்! இதெல்லாம் முன்னேற்பாடு நடவடிக்கைய்யா!
இவற்றை ராம்தேவ் செய்யாமல் இருந்திருந்தால்....?
ராம்தேவ் பக்தர்கள் சாலையோரங்களை இயற்கை உபாதைகளுக்கு பயன்படுத்தியதாகவும், டெல்லியின் பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் பாபா பக்தர்களால் கதிகலங்கியது எனவும் அலறியிருப்பீர்கள்? சரிதானே ராஜ்தீப்?
அப்புறம்.... சொல்லுங்க உங்க சம்பந்தப்பட்ட பணம் எதுனா சுவிஸ்'ல இருக்கா? எதுக்கு இந்த அலறல்?
காங்கிரசுடன் மீண்டும் கூட்டணி, கருணாநிதி விளக்கம்
சென்னை ஜூன் 4, 2014: காங்கிரசுடன் மீண்டும் கூட்டணி ஏன் என கருணாநிதி தன் கேள்வி-பதில் அறிக்கையில் விளக்கியுள்ளார்.
கேள்வி: "மூன்று வருடங்கள் முன் நீங்கள் "கூடா நட்பு கேடாய் முடியும்" என்று குறிப்பிட்டீர்களே? இப்போது மீண்டும் காங்கிரசுடன் கூடா நட்பு கொள்கிறீர்களா?
பதில்: ஆம், கூடாமல் விட்ட நட்பினால் விளையும் பயன்கள் கேடினில் சென்று முடியும் என்று குறிப்பிட்டேன். எம் மக்களுக்கு (!!!) எங்கள் கூடா(மல்விட்ட) நட்பினால் இந்த மூன்று ஆண்டுகள் நிகழ்ந்த அராஜங்களை மனதில் கொண்டு மீண்டும் மக்களுக்காகவென (!!!) அமைத்த கூட்டணி இது.
ஹெல்மெட் போட்டால்தான் பெட்ரோல்
இந்தியாவில் ஆண்டுதோறும் ஒருலட்சத்தி நாற்பதினாயிரம் பேர் சாலை விபத்துகளில் இறக்கிறார்களாம். இவர்களில் பெரும்பாலனோர் இரு சக்கர வாகன ஓட்டிகள். பல நடவடிக்கைகள் மூலம் அரசு இதனை குறைக்க முற்பட்டாலும் இந்த எண்ணிக்கையில் ஏற்றம்தான் இருக்கிறதேயொழிய இறக்கம் இல்லையாம்.
டெல்லியை அடுத்த குர்கான் மாவட்டத்தில் (ஹரியானா) போக்குவரத்து போலீசார் பெட்ரோல் நிலையங்களுக்கு லேட்டஸ்டாக விடுத்திருக்கும் அறிவுரை நல்ல ஒன்றாகத் தெரிகிறது. "ஹெல்மெட் போட்டு வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் தாருங்கள்" என்பதே அது. நிச்சயம் நல்ல வழிமுறை. நம்மூரிலும் இதைக் கடைபிடித்தால் நன்றாக இருக்கும். <நன்றி: தினமலர்>
மல்லையாவும் அஸ்வினும்
ஃபேஸ்புக்ல இருதினங்களாக உலாவரும் இந்த விடியோ.... சூப்பரப்பு!
.
.
.
2 comments:
தவகல்களின் தொகுப்பு...
@சௌந்தர்
என் ஒவ்வொரு பதிவிற்கும் வந்து ஊக்குவிக்கும் உங்களுக்கு நன்றிகள் கோடி!
Post a Comment