Jun 27, 2011

மழலை, பேச்சு, பேசுதிறன்

அகில் இப்போதுதான் ப்ளா ப்ளா ப்ளா என இரண்டு மூன்று எழுத்துக்கள் கூட்டிப் பேசத் துவங்கியிருக்கிறான்.  அகிலுக்காக எதையோ தேடிக் கொண்டிருந்த போது, இந்தப் பதிவு வாசிக்கக் கிடைத்தது. குழந்தைகள் மழலை மொழி பேசத் துவங்குகையில் அவர்களின் பேசுதிறனை மேம்படுத்த சில டிப்ஸ்'கள் இங்கே...

முதல் அட்வைஸ்: எல்லாக் குழந்தைகளுமே ஒரே மாதிரியான காலக் கட்டத்தில் பேசத் துவங்கிவிடுவது இல்லை. சில குழந்தைகள் ஒரு வயது நிறையும் முன்னே சுமாராகப் பேசத் துவங்குகின்றன. சில மழலைகள் இரண்டு வயது கடந்த பின்னரே ஆரம்பப் பேச்சுக்கு அடி போடுகின்றன. எனவே, ஒரு குழந்தையின் செய்கைகளை மறு குழந்தையிடம் எப்போதும் எதிர்பாராதீர்.

இப்போது மேம்படுத்த சில டிப்ஸ்.......


பேசுங்கள்.... நீங்கள் பேசுங்கள்:


உங்களைத் தவிர வேறு யாரும் உங்கள் குழந்தைக்கு பிரைமரி டூல் என இருந்துவிட முடியாது. எனவே, குழந்தைக்கென நேரம் ஒதுக்கி பேசிக்கொண்டே இருங்கள்.  குழந்தையுடன் ஏதேனும் விளையாடிய வண்ணம் பேசுதல் சாலச் சிறந்தது. ஏனெனில், குழந்தைகளின் கவனிப்புத்திறன் நம் கவனிப்பித்திறனைக் காட்டிலும் சிறந்தது. உங்கள் குழந்தை காதுகளால் கேட்பதை திரும்பச் சொல்வதைக் காட்டிலும், கண்களால் காண்பதை திரும்பச் செய்து பேசுகிறது..... புரிகிறதா?


கண்ணாடி..... முன்னாடி.....


கண்ணாடியின் முன் உங்கள் குழந்தையை நிறுத்திப் பாருங்கள். உங்கள் குழந்தைக்கும் ஆகட்டும் உங்களுக்கும் ஆகட்டும் பொழுது போவதே தெரியாது. கண்ணாடியில் எதிரில் இருக்கும் தன் உருவம்  தனக்கே தனக்கான, தான் சொல்வதைத் தட்டாமல் செய்யும் தோழன்/தோழியாக உங்கள் குழந்தை உணர்வதால் பேச்சு மேலும் பலப்படும். இங்கே நீங்கள் இடையில் புகுந்து பாடவோ, அல்லது ஏதேனும் கதை சொல்லிப் பேசவோ செய்தால் இன்னும் சிறப்பு.


பேர் சொல்லும் பிள்ளை....
நாம் பொதுவாக ஃபேன், லைட், டிவி போன்ற பொதுப்படையான பொருட்களை மட்டும் குழந்தைகளுக்கு முதலில் அறிமுகம் செய்கிறோம். மற்ற பொருட்கள் "அது அல்லது இது" என்றாகிப் போகிறது. அப்படி அல்லாமல், குழந்தை ஒரு கார் பொம்மையை வைத்து விளையாடினால், "கார் ஓடுது பாரு", "அந்தக் கார் என் கிட்ட குடு", "தேங்க்ஸ் செல்லம் கார் குடுத்ததுக்கு" என எந்தப் பொருள் என்றாலும் நீங்கள் பெயரைக் குறிப்பிட்டுப் பேசுவதை வழக்கம் ஆக்கிக் கொண்டால் குழந்தைகளின் மொழி அறியும் திறன் அல்லது பொருள் அறியும் திறனும் கூட வேகமாக வளரும்.


நண்பேன்டா....
மொழித்திறன் வளர்ச்சியில் உங்கள் குழந்தைக்கு அவர்கள் வயதை ஒத்த நண்பர்களை அறிமுகப்படுத்துவதை விட சாலச் சிறந்த வழிமுறை ஏதும் இல்லை என்கிறார்கள் வல்லுனர்கள். 'பேசப் பேசத்தானே பேச்சு?"


இந்த விடியோவைப் பாருங்கள்..... நல்ல உதாரணம்தானே?




நன்றி: Build baby language skills

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...