முப்பது வினாடிகள் தரிசிக்க ஐந்து மணி நேரங்கள் கால்கடுக்கக் காத்திருந்து பத்தடி தூரத்திலிருந்து பார்த்தேன் பத்மனை.
என்ன பூக்கள் சூடியிருந்தான்?
பூக்களை நான் எங்கே கண்டேன்?
என்ன அலங்காரம்?
அதையுமெங்கே கண்டேன்?
பின்னே என்னத்தைக் கண்டாய் அவனிடம்?
அவன் கைகளைக் கண்டேன்?
கைகளை?
ஆம், வலது கையைப் பார்த்தேன், தன் பாதம் பணியெனப் பணித்தான்.
சரி...
இடது கையைப் பார்த்தேன்; பணிந்தனையெனில் உன் சம்சார சாகரத்தின் ஆழம் உன் முழங்காலளவுதான், நீந்திக் கடப்பாய் எளிதினில் என்றான்.
அட....
ஆம், அவன் பாதங்களைப் பார்த்தேன்.... மனமுருகிப் பணிந்தேன், மனத்தினால் அவன் முன் சாஷ்டாங்கமாய் வீழ்ந்தேன். எனையறியாது என் கன்னத்தில் உருண்டோடின இரு துளிகள்.
ஏடுகொண்டலவாடா.... வெங்கடரமணா கோவிந்தா கோவிந்தா!
.
.
.
8 comments:
உள்ளத்தைத் தொடும் பதிவுக்கு நன்றி கிரி. வாழ்த்துகள்.
திருப்பதி தரிசனம் கிடைத்ததற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
30 விநாடிகளா?
கொடுத்துவச்ச புண்ணியவான்!!!!!
நல்லா இருங்க!
அருமை அருமை!...மெய் சிலிர்த்தது
செலவில்லாமல் ஒரு நிறைவான
தரிசனம்...பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள்...
@நட்பாஸ்
தங்கள் தொடர் ஊக்கத்திற்கு மெத்த நன்றி!
@ரத்னவேல் அய்யா
ரொம்ப நன்றி!
@துளசி கோபால்
வாங்கம்மா! ரொம்ப தூரத்துலருந்து ரொம்ப நாளைக்கு பெறகு இங்க வந்திருக்கீங்க! வேங்கடவனா கொக்கான்னேன்! உங்களைப் போல ஸ்டார் பதிவாளர்களையும் நம்ம பக்கம் அனுப்பிட்டான் பாருங்க!
ஆனா பாருங்க, அந்த முப்பது செகண்டு அனுபவம்.... ஏதோ வார்த்தையில தத்துபித்துன்னு எழுதிட்டேன்...ஆனா உண்மையில அந்த அனுபவத்தை எழுதல்லாம் முடியாது போங்க!
@ அம்பாளடியாள்
ஆஹா! ஆஹா! ரொம்ப சந்தோஷமுங்க!
Post a Comment