மச்சி சார் எழுதிய ஜன்மபந்தம் பதிவில் இதை நினைவுப்படுத்திவிட்டார். இரண்டு நாள்களாக இப்பாடல்களே படுத்தியெடுக்கின்றன.
தொண்ணூறுகளின் மத்தியில் மாதவரம் எம்.ஆர்.எல். ஏஜன்சியில் கணக்கு எழுதிக்கொண்டிருந்தபோது வாங்கின கேஸட் அது. கேட்டுத் தேய்த்த அந்த கேஸட் இப்போது யாரிடம் இருக்கிறதோ தெரியவில்லை. கஸல்கள் கேட்க எனக்கு அறிமுகம் கிடைத்தது ஹரிஹரன் வாயிலாகத்தான்.
ஹாஸிரின் ஸ்பெஷாலிட்டி ஹரியுடன் உஸ்தாத் ஜாகிர்ஹூசைன் தபேலா வாசித்திருப்பார். முக்கால்வாசிப்பாடல்கள் எனக்குப் புரியவே புரியாது. கஸல்களின் இலக்கணத்திற்கேற்றார்போல் இடையிடையே உருது வார்த்தைகள் வந்து சேர்ந்து கொள்ளும். எனவே ஹிந்தி தெரிந்தவர்கள் பலரும்கூட அருஞ்சொற்பொருள் சொல்ல யோசிப்பார்கள்.
இருந்தும், மொழிதாண்டி கஸல்களில் உங்களால் லயிக்க இயலும் வகையில் இருக்கும் ஹரியின் குரல், குழைவு, பாவங்கள் எல்லாம்.
ஹாஸிரிலிருந்து ஒரு பாடல் இங்கே சாம்பிளுக்கு.... மற்றவற்றை தேடிக் கொள்ளுங்கள்:
ஹாஸிர் தாண்டி ஹரியின் கஸல்களில் டாப் க்ளாஸ் என்றால் நான் இதைச் சொல்வேன்... இங்கே பாடியிருப்பவர் ஹரிஜியின் விசிறியொருவர்.
No comments:
Post a Comment