Aug 29, 2011

கடமை உணர்ச்சிக்கு அளவில்லையா?



ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்

"ஹலோ"

"சார் மிஸ்டர் கிரி ராமசுப்ரமணியன் பேசறீங்களா?"

"ஆமா, சொல்லுங்க சார்"

"நான் எக்ஸ்வொய்இசட் இன்சூரன்ஸ் கம்பெனிலருந்து சோமசுந்தரம் பேசறேன்"

"பேசுங்க சார்"

"நான் உங்ககிட்ட முன்னவே பேசியிருக்கேன்"

"ஓ"

"சரியா சொல்லணும்னா போன ஆகஸ்ட்'ல உங்களை கூப்பிட்டேன்"

"அப்பிடியா?"

"ஆமா சார்! ஸேம் ட்வென்டி நைன்த் கூப்பிட்டிருந்தேன்"

"என்னங்க சொல்றீங்க?"

"இல்லை போன வருஷம் ஆகஸ்ட் இருபத்தி ஒன்பது உங்களை கூப்டேன். ஒரு இன்வெஸ்ட்மென்ட் பிளான் பத்தி உங்களுக்கு விளக்கினேன்"

"ஓஹோ! சாரி சார் எனக்கு நினைவில்லை"

"பரவால்லை சார்! நீங்க கூட, கமிட்மெண்ட்ஸ் இருக்கறதால ஒரு வருஷத்துக்கு எதுவும் இன்வெஸ்ட் பண்ண முடியாதுன்னு சொன்னீங்க"

"அதனால?"

"அதனால, சரியா ஒரு வருஷம் முடிஞ்சிடுச்சி. இப்போ இன்வெஸ்ட் பண்ற ஐடியா இருக்கான்னு கேக்க போன் பண்ணினேன் சார்"

"ட்வென்டி நைன்த்?"

"ஆமா சார்"

"அதாவது, இருவத்து ஒம்பது?"

"எஸ் சார்!"

"போன வருஷம்?"

'எஸ் எஸ் சார்..."

"யோவ்! வெய்யா போனை"
.
.
.

4 comments:

ப.கந்தசாமி said...

இந்த மாதிரி ஆட்களினால்தான் பதிவுலகம் ஓடிக்கொண்டு இருக்கிறது.

Giri Ramasubramanian said...

இப்பிடிக் கவுத்துப்புட்டீங்களே டாக்டர்!

valaipathivu said...

டயலாக்கை இன்னும் கொஞ்சம் நீட்டியிருக்கலாம்.

Karthik Raju said...

தாங்கமுடியலை

Related Posts Plugin for WordPress, Blogger...