Sep 14, 2011

நிமிஷக் கதைகள்

நேற்று மதியம் அலுவலகம் போகுமுன் தெருமுனைக் கடையில் லிம்கா குடிக்க வண்டியை நிறுத்தினேன்.  அந்தக் கடைப் பையனை எப்போதும்  கவனித்திருக்கிறேன். ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பான். நாம் கேட்பதை இரண்டு முறைகள் திருப்பிச் சொன்னால்தான் கேட்டது கேட்டதாகக் கிடைக்கும். வாங்கின பொருட்களுக்கு விலை சரியாகப் போட்டிருக்கிறானா என சரிபார்த்துக் கொள்ளுதல் எப்போதும் நலம். நாற்பது ரூபாயை பதினாலு என்றும் சொல்வான். பத்து ரூபாயை ஐம்பத்தி நாலு என்றும் சொல்வான்.

நான் லிம்கா அருந்திக் கொண்டிருந்தபோது சொல்லிவைத்தாற்போல் அந்தப் பெரியவருக்கு இரண்டு கிலோ அரிசியை எழுபத்து நாலு என்றான். 

"ஒரு கிலோ எவ்ளோ தம்பி?"

"முப்பத்தி ஆறு"

"அப்போ ரெண்டு கிலோ?"

"ஓ! சாரி சார்! இந்தாங்க ரெண்டு ரூபா!"

கால்குலேட்டர், கம்ப்யூட்டர்கள் இல்லாமல் கணக்குப் போட்ட  பழங்கதைகள் பேசத் தொடங்கிவிட்டார் பெரியவர்.

பதினைந்து வருடங்களுக்கு முன் மூலக்கடை ஃ பாத்திமா ஸ்டோரில் பார்த்த கணக்கு என்ற நபர் நினைவிற்கு வந்தார். அங்கே அடித்த ஸ்பார்க்கில் எழுதியதுதான் "சிவலிங்கம் ஸ்டோர்ஸ்" என்ற இந்த நிமிஷக் கதை. 

நட்பாஸ் அவர்களின் லைவ்லி பிளானெட் தளத்தில், அவர் தந்த ஊக்கம் மற்றும் அனுமதி ஆகியவை துணை கொண்டு கடந்த சில வாரங்களாக நிமிஷக் கதைகள் எனப்படும் flash fiction வகைக் கதைகளை முயற்சித்து வருகிறேன். நான் எழுதும் நிமிஷக் கதைகளுக்குப் பெரிய மனது பண்ணி தன் தளத்தில் இடம் தரும் நட்பாஸ் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

Flash fiction பற்றி விக்கி:  http://en.wikipedia.org/wiki/Flash_fiction
.
.
.

6 comments:

natbas said...

இதெல்லாம் ஓவரு! உங்க கதையை பதிவேற்ற நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

கதைகளை தானம் செய்த புண்ணியத்துக்கு உங்களுக்கு கூடிய சீக்கிரம் சுஜாதா விருது கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்!

நன்றி.

Unknown said...

கலக்குங்க..

Giri Ramasubramanian said...

@ நந்தா ஆண்டாள்மகன்

மிக்க நன்றி!

Giri Ramasubramanian said...

@ நட்பாஸ்

ஆஹா! கெளம்பிட்டாரய்யா!

Breeze said...

Flash Fiction =Short stories?

Giri Ramasubramanian said...

@ Breeze

Shortest stories :)

Pls follow the link provided there!

Related Posts Plugin for WordPress, Blogger...