இன்று 11/11/11 என்று தேதி அமைந்திருப்பது கண்டு உலகமே அல்லோலகல்லோலப் படுகிறது. அமிதாப் தாத்தா ஆகப்போகும் நாள் இது எனத் தெரிகிறது. ஆங்கில செய்தி சேனல்கள் வழக்கத்திற்கு அதிகமாகவே கூவிக் குவிக்கின்றன. ட்விட்டரில் மக்கள் இதை ட்ரெண்ட்ருகிறார்கள்.
111111’ஐ நினைவுறித்தி இதுவரை நூற்றிப் பதினோரு எஸ்ஸெமெஸ்ஸுகள் வந்திருக்கின்றன. இன்றைக்கு ஏதும் ஸ்பெஷலாக செய்யாவிட்டால் திகாருக்கு அனுப்பிவிடுவார்கள் போல.
ஆகவே, மறவாது இந்த பதினோரு செயல்களை நான் இன்றைய ஷெட்யூலில் வைத்திருக்கிறேன் என்று சொல்லிக் கொள்கிறேன்.
1) பொறுப்பாக படுக்கை மடித்து வைப்பது
2) லாகின் செய்து ட்விட்டர் முன் அமர்வது
3) திடீர் ஞானம் வந்து மறக்காமல் பல் விளக்குவது
4) காபி, பிஸ்கட்
5) காலைக் கடன்கள், 11/11/11’ஐ முன்னிட்டு ஸ்பெஷல் குளியல்
6) டிபன் (செய்தால் சாப்பிடுவது அல்லது செய்து சாப்பிடுவது)
7) அலுவலகம் போவது, முடிந்தால் வேலை செய்வது
8) லன்ச்
9) வீடு திரும்பல்
10) இன்றைய பாடலைப் பாடி, வலையேற்றி மறக்காமல் மக்களைக் கொல்வது
11) ட்விட்டர் ஸைன் ஆஃப் செய்துவிட்டு படுப்பது
இதற்குமேல் செய்ய என்ன?
இதற்குமேல் செய்ய என்ன?
5 comments:
இதை எல்லா நட்களிலும் செய்து விட்டால் வாழ்க்கை இனிக்கும்...
அப்படியே செய்யுங்க...
இந்த பதினோன்றையும் தினமும் கடைபிடியுங்கள் சகோ...
நம்ம தளத்தில்:
மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! சிஎன்சி (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 11
கிரி
பதினொன்றாம் பரிமாணம் பற்றி வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.
அவருக்குத் தெரியப்படுத்துங்களேன்.
பதினொன்று பற்றிய தலைப்புக்கு இது பொருத்தமான பின்னூட்டம்தான்:-)
http://blogintamil.blogspot.com/2011/11/blog-post_13.html
பின்னூட்டமிட்ட அன்பர்களுக்கு நன்றி
@ Gopi Ramamoorthy
நன்றி சார்.
தங்கள் நல்லெண்ணத்துக்கு தாங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
:)
Post a Comment