வேலாயுதம் பட பூஜை நேரத்தில் வெளியான ஸ்டில்களை வைத்து நானும் படத்தைக் கிண்டலடித்து இரண்டு பதிவுகள் எழுதினேன்.
ஆனால் படம் வந்தபின் மக்களிடம் நான் கண்ட ரெஸ்பான்ஸ் பார்த்து நானே, அடடா விஜய் நல்ல படம் ஒண்ணுல நடிச்சிருக்காரு போலருக்கே. இப்பிடி எழுதிட்டமே’ன்னு வருத்தப்பட்டேன். இந்த எண்ணமெல்லாம் படத்தை தியேட்டர்ல போயி தேடிப்பிடிச்சுப் பார்த்தேன் பாருங்க..... அதுவரைதான்.
ட்விட்டர் அன்பர் ஸ்வாமிநாதன் ( @schokkan ) படம் பார்த்தப்போ லைவா கதறிக் கதறி ட்விட்டர்ல ரெவியூ எழுதினார். அதையாவது நான் மனசுல பதிச்சிருக்கணும். அவர் சொன்னதை மறந்துட்டு நம்ம அன்பர் அர்ஜூன், “படம் சூப்பர்ண்ணே” ( @vedhalam ) அப்டின்னு சொன்னது காதுல ரீங்கரிச்சிட்டு இருந்தா நான் என்ன பண்ணுவேன்.
இந்த படத்தை பார்க்க எனக்கு நாலுவாரமா தடை வந்துட்டே இருந்துச்சு. வேலாயுதம்தான் போகணும்னு நான் அடம் பிடிக்க இல்லை ஏழாம் அறிவு போறோம்னு மூணுவாரம் முன்ன நண்பர்கள் மாயஜால்’ல என்னைத் தரதரன்னு இழுத்துட்டு போனாங்க. அப்பவே நான் உஷாராகியிருக்கணும். கடைசியா நண்பர்கள் “தோ வெயிட் பண்ணுபா, ரெண்டே நிமிஷம் தேடினா கிடைக்கும் ஸிடி’யோட வர்றோம்”னு சொன்னப்பவும், அட ஸிடி’லல்லாம் பார்த்தா சரிவராது, பார்த்த எஃபெக்ட் இருக்காது. எனக்கு சினிமான்னா தியேட்டர்லதான் பாக்கணும், வாங்க தியேட்டருக்கே போலாம்னு சொன்னவன் நான்தான்.
மடிப்பாக்கம் குமரன் தியேட்டர்ல பதினஞ்சு பேருக்கு மேலே தலைகளைக் காணோம். OMR'ல இருக்கற ஏஜிஎஸ் தியேட்டர்ல இருபது டிக்கெட் வரலைன்னா ஷோ கேன்சல் பண்ணிடுவாங்களாம். அது போலயாச்சும் குமரன் தியேட்டர்காரங்க எதாவது பண்ணியிருக்கக் கூடாதா?
விஜய் ஒரு மொக்கை நடிகரா இருந்தா இதுபோல பொலம்பலுக்கெல்லாம் வேலையே இல்லை. அவர் பண்ற குசும்பு, டான்ஸ், அடிதடி மட்டும் போதும்னா நம்க்கு பழைய டிவிடிகள், யூட்யூப்’ல கெடைக்கற பழைய க்ளிப்பிங்ஸ் போதுமே?
நண்பன், யோகன் படங்களாவது நம்மை ஏமாற்றாது என நம்புவோம்.
2 comments:
பிளட் அதிகமோ... இனிமே விஜய் படம் பாக்க எதுக்கும் யோசனை பண்ணி முடிவு எடுங்க.
நம்ம தளத்தில்:
நமது உலகத்தை(பூமி) இப்படி யாரும் பார்த்திருக்க மாட்டிங்க?
Mooditu Poda mokkai nee virunthaliku poranthavan
Post a Comment