சென்ற வாரயிறுதியில் வெளியூர் சென்றுவிட்டு சென்னை திரும்பும் வழியில் அச்சரப்பாக்கத்தில் இரவு உணவுக்கு வண்டியை நிறுத்த ஆயத்தமானோம். மதியம் ட்விட்டர் நண்பர் கோகுலின் “கணேஷ்பவனை மறந்திட்டா சென்னையே திரும்பாதே” என்ற ட்வீட்டுக் குரல் காதில் ஒலிக்க கணேஷ்பவனில் நிறுத்தவும் என்று டிரைவரிடம் சொல்லியும் அவர் ஏதோ பிடிவாதத்தில் கணபதி விலாஸ் (since 1963!!??) என்ற உணவகம் முன் வண்டியை நிறுத்தினார்.
முன்னே பின்னே கணேஷ்பவன் பார்த்திராததால் சரி அதுதான் இதுபோல நாம்தான் பெயரைத் தவறாக மனதில் குறித்து வைத்தோம் போல என்றெண்ணி உள்ளே நுழைந்துவிட்டோம். இணைய உலகமே ஆஹா ஓஹோ எனக் கொண்டாடும் சுவையில் அங்கே கிடைத்த இட்லியும் இல்லை சட்னியும் இல்லை எனத் தெரிந்தபின் மாயவரத்தாருக்கு ஃபோன் அடித்து அது வேறு கடை என்றறிந்தோம். அடச்சே என்றானது.
இந்தக் குழப்பம் இப்படியிருக்க கணேஷ்பவன் என்ற பெயரில் அரைடஜன் உணவகங்கள் அச்சரப்பாக்கத்தில் உண்டாம். என்னக் கொடுமைடா! அப்படியென்றால் ஒரிஜினலை எப்படிக் கண்டறிவது என்றால்.... பழைய கடையில் “பழைய” என்ற போர்டு தொங்குமாம். சரிதான் என நினைத்துக் கொண்டேன்.
போனது போகட்டும்! இந்த விலைப்பட்டியலை ஒரு வரலாற்று ஆவணமாக இங்கே பதிந்து வைக்கிறேன். 2000 ஆண்டுகள் கழித்து என் தளத்தை தோண்டியெடுத்து வாசிப்போர் நவம்பர் 2011’ல் நம்மூரில் இட்லி விற்ற விலையைத் தெரிந்து வாய் பிளக்கட்டும்.
2 comments:
வரலாற்றுப் பகிர்வுக்கு நன்றி.
ஆமாம்..... இந்த அச்சரப்பாக்கம் எங்கே இருக்கு?
@துளசிம்மா
சென்னை - திருச்சி சாலையில் மேல்மருவத்தூர் தாண்டினதும் நாலு கிலோ மீட்டர் தொலைவுல இருக்கு.
Post a Comment