ட்விட்டர் நண்பர் வேதாளம் (எ) அர்ஜூன் தன் ட்வீட்டுகளைத் தொகுத்து மின்புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். தன் முதல் புத்தகத்திற்கு அணிந்துரை எழுதும் கௌரவத்தையும் எனக்குத் தந்தார். அந்த அணிந்துரையின் சில வரிகள் இங்கே.
மூன்று மணிநேரத் திரைப்படத்தில் சொல்வதை விட, முப்பது நிமிட நாடகத்தில் சொல்வதை விடக் கடினம் ஒரு கதையை முப்பது நொடிநேர விளம்பரத்திற்குள் அடக்குதல். ஆனால் பலப்பல சினிமாக்கள் நாடகங்கள் தொடாத இடங்களையெல்லாம் சின்னஞ்சிறு விளம்பரங்கள் தொட்டுவிடுகின்றன.
அதே கதைதான் இந்த ட்விட்டர் தருவதும். நாவல்கள், கதைகளில் சொல்லாத பெரிய தகவல்களையும் கூட நூற்று நாற்பதே எழுத்துகளில் (அல்லது charector'களில்) சொல்லத் தெரிவது ட்விட்டரின் அழகு..........."மூர்த்தி சிறுசு; கீர்த்தி பெருசு" என்று கேட்டிருப்பீர்கள்! அர்ஜூன் அந்த ரகந்தான். எங்கள் முதல் சந்திப்பில் (கார்பரேட் கனவுகள் புத்தக வெளியீட்டில்) அர்ஜூனைப் பார்த்த போது, "எந்த ஸ்கூல் படிக்கறீங்க?", என்ற என் கேள்விக்கு, "நம்புங்க சார், நான் சாப்ட்வேர் எஞ்சினியர்", என்ற பதிலை என்னால் நம்பத்தான் முடியவில்லை. சரி ஒரு ஆர்வமான சின்னப்பயல் வந்திருக்கிறார் என்றுதான் நினைத்தேன். பிறகு அவர் எழுதும் ட்வீட்களைத் தொடரத் துவங்கிய பின்தான் "இது பெரிய பார்ட்டி ஓய்!", என்று என் கருத்தை மாற்றிக் கொண்டேன்.
உதாரண ட்வீட்'டாக கிட்டத்தட்ட ஒரு ஹைக்கூ! வடிவிலான இதைப் பார்த்தால் தெரியும்,"கோயிலின் ஒவ்வொரு படிக்கட்டிலும் ஒரு கற்பூரம் கொளுத்தப்படுகிறது #ஆமென்"
இந்த ட்விட்டர் உலகில்..... ...வட்டம் எதையும் வரையறுக்காமல் புழங்குபவர்களை நாம் விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த ஒரு சிலரில் முதன்மையானவராக அர்ஜூன் நிச்சயம் இருப்பார்....
.....தமிழ் டிவிட்டர் உலகினர் பலரையும் நேரில் சந்தித்து நட்பைத் திடப்படுத்திக் கொண்ட பெருமையும் நம் அர்ஜூனையே சாரும்.......
வாழ்த்துகள் அர்ஜூன்! எழுத்துலகில் இன்னும் பலப்பல படிகள் ஏறி சாதனைகள் பல புரிய வாழ்த்துகள்!
மின்புத்தகம் டவுன்லோடு செய்ய: இனியவை 140
வேதாளம் அர்ஜூனின் வலைப்பதிவு: இனியவை 140
1 comment:
வாழ்த்துகள்.
Post a Comment