ராகுல் டிராவிட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இந்த 16 வருடங்களில் அவர் கடந்த சாதனைகளைப் பட்டியலிடுவதோ, அவர் ஆடிய ஏதோ ஒரு ஆட்டத்தை மேற்கோள் காட்டியோ இங்கே எளிமையாகப் பேசிவிட முடியாது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தன் 10000’ஆவது ரன்னை அவர் சென்னை சேப்பாக்கத்தில் கடந்த போது அந்த பெருமைக்குரிய தருணத்தை நேரில் தரிசித்ததை மாத்திரம் இங்கே பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்!
இந்த நெடிய 16 வருடங்களில் அயராத ஆட்டத்தை வெளிப்படுத்தியவரும், இந்தியாவை பலப்பல தருணங்களில் சர்வதேச கிரிக்கெட் உலகில் தலைநிமிரச் செய்தவருமான ஒருத்தரின் விலகல் நிச்சயம் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஓர் பெரிய இழப்பே!
இனி அவர் ஆடும் ஆட்டங்களை ஹைலைட்ஸ்’களிலும் யூட்யூபிலும் மாத்திரமே காண முடியும் என்பதை எண்ணும்போது ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகனைப் போலவும் எனக்கும் கண்கள் பனிக்கின்றன.
நன்றி டிராவிட்! வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை எனக்கு!
2 comments:
அருமையான பதிவு.
நன்றி.
இந்திய பெருஞ்சுவர் ! மனம் கஷ்டமாய் தான் இருக்குது ! பை பை டிரா வின்...சாரி...டிராவிட் !
Post a Comment