பாலசந்தர் - ரஜினி கூட்டணியில் 80’களின் தொடக்கத்தில் வெளிவந்த தமிழின் தலைசிறந்த காமெடி திரைப்படங்களுள் ஒன்றான ”தில்லு முல்லு” படம் ரீமேக் செய்யப்படுவதாக செய்திகள் வருகின்றன.
”தமிழ்ப்படம்” புகழ் சிவா கதாநாயகனாக நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிய வருகின்றன.
நம் தில்லுமுல்லு படத்திற்கே ஒரிஜினல் வெர்ஷனான கோல்மால் (ஹிந்தி) படம் சமீபத்தில் அஜய் தேவ்கன் தயாரிப்பில் “போல் பச்சன்” என்ற பெயரில் வெளிவந்து சுமாரே சுமாராக நல்லபடியாக இப்போது ஓடிக் கொண்டிருந்தாலும் பழைய படத்தின் கதை வடிவத்தை நிறையவே மாற்றியிருக்கிறார்கள்.
நகரத்தில் சொத்துகளை இழக்கும் அபிஷேக் கிராமத்திற்கு தன் தங்கையுடன் குடிபெயர்கிறார். அங்கே தேங்காய் சீனிவாச முதலாளியாக அஜய்தேவ்கன் இருக்கிறார். வேலை வேண்டி இந்து-இஸ்லாமிய கதாபாத்திரங்களில் அஜய்தேவ்கனை மீசை வைத்தும் வைக்காமலும் ஏமாற்றுகிறார் அபிஷேக். பைப் பிடித்து மாடி ஏறி வந்து நடிக்கும் சௌக்கார் அம்மா கேரக்டரும் உண்டு. இவரின் தங்கையை அவர் காதலிக்க, அவர் தங்கையை இவர் காதலிக்க இறுதியில் வழக்கம் போல உண்மைகள் வெளிவந்து சுபம்.
இப்படிப்பட்ட உல்டா-புல்டா வேலைகளைச் செய்துதான் தமிழ் ரீமேக்கும் வெளி வருமா, இல்லை வந்தது வந்ததாய் வந்து சேருமா எனத் தெரியவில்லை. எப்படி இருந்தாலும் ரீமேக் எடுத்து சொதப்புவதைக் காட்டிலும் நிஜ வெர்ஷனை ஏதேனும் டிஜிடலைஸ் வேலைகள் செய்து நம்மவர்கள் ரீ’ரிலீஸ் செய்யலாம் என்பதே என் கருத்து. அதுவே பிய்த்துக் கொண்டு ஓடும் என் உத்திரவாதம் தரலாம்.
”ரீமேக்கா? வேணாம்யா”, என்று ஓங்கிக் கத்த வேண்டும் போலிருக்கிறது.
படங்கள்: நன்றி - விக்கி
3 comments:
தில்லு முல்லு இந்தி படத்தின் காப்பியா?
You may know that "thillu mullu" acted by Rajni is the remake of "Golmaal" directed by Hrikesh mukherjee. For me the hindi version is best, Balanchander version is very bore, avlothaan
”தமிழ்ப்படம்” புகழ் சிவா கதாநாயகனாக நடிப்பது.... நினைக்கவே கஷ்டமா இருக்கு....
Post a Comment