படம் வந்து ஒரு மாசம் ஆச்சோ என்னவோ. இன்றைக்குத்தான் நமக்குப் பார்க்க வாய்த்தது.
விமர்சனத்தை தமிழில் பி.ஆர்.மஹாதேவர் தவிர்த்து எல்லோரும் எழுதியாச்சு என்பதால் பிரித்து மேயும் வேலை நமக்கு கொஞ்சம் நிறையவே மிச்சம்.
முந்தைய மஹதீரா’வில் முன் ஜென்மம் மறு ஜென்மம் பேசினார் இயக்குனர் ராஜமௌலி.
இந்தப் படத்தில் கதை ஆரம்பித்த இருபது நிமிடத்தில் ஹீரோயினுக்காய் செத்துப் போகும் ஹீரோ ஈ வடிவில் மறுபிறப்பு எடுக்கிறார். மீதமுள்ள இரண்டு மணிநேரத்தில் வில்லனை ஜாலியாக, ரசனையாக, அமர்க்கள அதகளங்களுடன் அல்லாட விடுகிறார். க்ளைமாக்ஸில் அவருக்கு கொள்ளி வைக்கிறார், அவ்வளவே கதை.
ஒன்றுமே இல்லாத அல்லது ரிப்பீட் அடிக்கத்தக்க கதைக்கும் ஸ்க்ரீன் ப்ளே என்கிற வஸ்து ஸ்ட்ராங்காக இருந்தால் போதும் என்பதற்கு இந்தப் படம் ஒரு க்ளாசிக் உதாரணம். கொஞ்சமும் தொய்வின்றி படம் முழுக்க உங்களை சீட்டின் நுனியில் அமர வைத்து பார்க்க வைக்க கேரண்டி தருகிறார் இயக்குனர். படம் நெடூக காமெடிக்குப் பஞ்சமே இல்லை.
இன்னமும் அங்கங்கே தியேட்டர்களில் படம் ஓடிக் கொண்டே இருக்கிறது. படம் பார்க்காதவர்கள் ஒரு எட்டு உங்கள் வீட்டு மழலைகள் சூழ தியேட்டர் போய் வந்துவிடுங்கள்.
No comments:
Post a Comment