ஆம்னிபஸ் தளம் தொடங்கி வெற்றிகரமாக இருபத்தியிரண்டு நாள்கள் ஆகின்றன. வாரம் இரண்டு அல்லது மூன்று பதிவுகள் என்ற உத்தரவாதத்துடன் துவங்கிய ப்ராஜக்ட் இது. அதற்குள் முப்பது பதிவுகள் வாயிலாக முப்பது புத்தக அறிமுகங்கள் ஆயிற்று.
சுஜாதா, நாஞ்சில் நாடன், பாரதியார், ஆதவன், லா.ச.ரா, ஷோபா சக்தி, என்.சொக்கன், வாலி, கலாப்ரியா, சா.கந்தசாமி, சுகுமாரன், யுவன் சந்திரசேகர், லலிதா ராம் என்று ஒரு பெரிய ரவுண்டு அதற்குள் அடித்தாகிவிட்டது.
எட்டு நண்பர்கள் தொடர்ந்து எழுதுகிறோம். அவ்வப்போது சிறப்புப் பதிவர்களும் தனியே பதிவுகளை அனுப்பிச் சிறப்பிக்கிறார்கள்.
A library is a hospital for mind என்பார்கள். புத்தக வாசிப்பின் அவசியம் சொல்ல இந்த ஒரு quote போதுமானது. இந்த 365 ப்ராஜக்ட் மூலம் நாங்கள் புதிது புதிதாய் வாசிக்கிறோம், வாசிப்பவற்றை அறிமுகம் செய்கிறோம்.
இந்த நல்ல நோய் உங்களையும் தொற்றிக் கொள்ள http://omnibus.sasariri.com தளத்தைத் தொடர்ந்து வாசிக்க அழைக்கிறோம்.
கூகுள் ரீடரில் ஆம்னிபஸ்
2 comments:
கிரி,
தயவுசெய்து என் பெயரை இன்ஷியலுடன் குறிப்பிட வேண்டுகிறேன், புத்தகங்களில் அவ்வாறுதான் வருகிறது,
தவிர, இணையத்தில் சொக்கன் என்று இன்னொருவரும் எழுதிவருகிறார்
: என். சொக்கன்,
பெங்களூரு.
done சாரே!
நன்றி!
Post a Comment