Courtesy: http://juhikulkarnidrawing.blogspot.in
2010’ல் வெள்ளிதோறும் “வெள்ளிக் கதம்பம்” என்று பிச்சிப் பிச்சி ஏதோ எழுதிக் கொண்டிருந்தேன்.
அண்ணன்மார்கள் ஜாக்கி எழுதிய நான்வெஜ்-சாண்ட்விஜ் மற்றும் உனாதானா’வின் இட்லிவடைபொங்கல் இரண்டு தொடர்களும் இன்ஸ்பிரேஷன் அந்த கட்டத்தில். பிறகு அது பாதியில் எல்லாம்வல்ல சோம்பேறித்தனத்தில் நின்றுபோனது.
இப்போது சமுத்ரா எழுதும் கலைடாஸ்கோப் வாசிக்கையில் நாமும் அவ்வளவு உருப்படியாக ஏதும் எழுதாவிட்டாலும் எதையேனும் வாராவாரம் வழக்கப் பழக்கமாகக் கொண்டு கிறுக்கலாம் எனத் தோன்றுகிறது.
இப்படி யோசித்ததன் பலன்? இதோ வெள்ளிக் கதம்பம் வாஸ்துப்படி தலைப்பைத் திருத்திக்கொண்டு “கதம்பம்” என்ற பெயரில் உங்கள் முன்னே.
வாரம் ஐநூறு வார்த்தைகள் லட்சியம். முன்னூறு நிச்சயம்.
ஆ..! அறிமுகத்திலேயே அறுபத்தியாறு ஆச்சுது.
குப்பையைக் குப்பைத் தொட்டியில்...
பம்மல் சங்கர் நகரில் கடந்த இரண்டு மாதங்களாக சென்ட்ரல் பேங்க் ஏடிஎம் ஒன்று இயங்கி வருகிறது. பம்மல், பல்லாவரம் என பணமெடுக்க ஓடத் தேவையில்லாமல் நமக்குப் பக்கமாக இந்த ஏடிஎம் இருப்பது பெரிய துணை.
ஒரே குறை. அந்த ஏடிஎம் என்றும் சுத்தமாக இருந்ததில்லை. செக்யூரிட்டி துணையற்ற அந்த ஏடிஎம் முழுக்க மக்கள் பணமெடுத்த பின் தூக்கியெறிந்து செல்லும் பணப்பட்டுவாடா ஸ்லிப்புகள் கீழே கிடக்கும். இத்தனைக்கும் அலங்கார வங்கிமுத்திரை பதித்த ஒரு உயரமான பட்டுத்தெறிக்கும் சிவப்பு நிற “குப்பைத் தொட்டி’யும் அங்கே உண்டு.
நம் மக்கள் பாரம்பரிய குணத்தை அந்த சிவப்பு ஈர்க்கவில்லை.
இன்று உள்ளே நுழைந்தால் தரை சுத்தமாகக் குப்பை அனைத்தும் குப்பைக் கூடையில் இருந்தது. புதிதாக யாரேனும் செக்யூரிட்டி வேலைக்கு இருக்கிறார்களா எனப் பார்த்தால் அதுவும் இல்லை.
அப்போது இந்த திடீர் மாற்றத்திற்குக் காரணம்?
இரண்டு சின்னச் சின்ன சுவரொட்டிகள்.
“குப்பையைக் குப்பைத் தொட்டியில் போட்டதற்கு நன்றி” / "Thanks for using the Dustbin"
நம் மக்களுக்கு எப்படியெல்லாம் இன்ஜெக்ஷன் போடவேண்டியிருக்கிறது?
#TamilProverbsInSimpleEnglish
நேற்று இந்த ஹாஷ்டேக் ட்விட்டரில் பரபரவென்று ஓடிக் கொண்டிருந்தது. மக்கள் அதகளம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அவற்றில் சில இங்கே. உங்களால் அவற்றின் ஒரிஜினல் வெர்ஷனைக் கண்டறிய முடிகிறதா பாருங்கள்: ஈஸிதான்.
Once flood goes above your head, what is inch, what is foot; anyway you are dead.
City breaks in two, Stand Up Comedian celebrates!
stone husband grass husband
Don't know depth?, then don't insert leg!!
For crow its tool golden tool.
When head is there, tail should not give proxy
Good cow one heat. Good man one word.
எங்கள் டீமில் (அலுவலகத்தில்) ஒரு நைஷ்டிக பிரம்மச்சாரி இருக்கிறார். நைஷ்டிக பிரம்மச்சாரி என்றால் என்ன என்பதை வேறொரு கதம்பத்தில் பார்ப்போம். இங்கே அது நமக்குத் தேவையில்லை. அவருக்கு குமரகுரு என்று பெயர் சூட்டிக் கொண்டால் அவரைப் பற்றி அடிக்கடிப் பேச வகையாயிருக்கும். எங்கே போனாலும் எனக்கு ஆன்மீக விஷயங்களைப் பற்றி அளவளாவ ஒருத்தர் கிடைத்திடுவார். இங்கே இந்த டீமில் இவர் வாய்த்திருக்கிறார்.
எல்லோரும் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன ஒரு அரதப்பழைய கேள்வியை மற்றொரு நண்பரான...ம்ம்ம்ம்... இவர் பெயரை பிரசன்னா எனக் கொள்வோமே.... அந்தப் பிரசன்னா கேட்டார்.
”ராமர் ரெண்டு தப்பு செஞ்சாருங்க அது சரிதானா?”
”என்ன தப்பு?” இது குமரகுரு.
“ஒண்ணு வாலியை எப்படி அவரு மறைஞ்சிருந்து தாக்கலாம்? ரெண்டு, பொண்டாட்டியை கடைசில காட்டுல கொண்டு விட்டுட்டாரே சந்தேகப்பட்டு”
இதற்கு நம் குமரகுரு தந்த வியாக்கியானத்தைத் தனி புத்தகமாக முடியாவிட்டாலும் ஒரு அத்தியாயம் கொண்டுதான் எழுத வேண்டும். நேரமிருந்தால் பின்னர் எழுதுகிறேன்.
இடையே ஒரு சூப்பர் கேள்வி நம்ம பிரசன்னா கேட்டார் பாருங்கள். ”எல்லாத்தையும் பண்ணிட்டு ராமன் மனுஷன்’னு சொல்லிட்டா அவரை எதுக்கு கடவுளாக் கும்புடறீங்க” குட் கொஸ்சின் ரைட்? எனி ஆன்ஸர்ஸ்?
மே பி, சொக்கன் ஏதோ கம்பன் பாட்காஸ்ட் ஓட்டிக் கொண்டிருக்கிறார், கேட்டால் புரியுமோ என்னவோ.
ஆல்டோ / ஐஃபோன் / அம்பது இன்ச் டிவி
என்னவோ போங்க. இந்தத் தலைப்புல எதாவது ஒண்ணு பத்தி “வாங்கிட்டேஏஏஏஏன்ன்ன்ன்ன்ன்” அப்டின்னு ஒரு அப்டேட் தந்துடணும்னு பாக்கறேன், stone see dog not see, dog see stone not see.
அகில் அப்டேட்ஸ்
அகிலுக்கு ரெண்டு வயசும் அஞ்சு மாசமும் ஆகுது. இன்னைக்கு குச்சி மிட்டா ய் எனப்படும் லாலிபாப் சாப்டுட் டு இருந்தான். விளையாட்டா அவன் கை லருந்து அதைப் பிடுங்கி "உஷ் காக்கா"ன்னு சொல்லிட்டு இன்னொரு கையில பின்பக்கமா அதை மறைச்சி வெச்சுக்கிட்டேன். அழுகை முட்டி க்கிட்டு வந்துடுச்சு அவனுக்கு. பாக்க பாவமா இருக்க, உடனே "உஷ், காக்கா திருப்பி தந்துடு ச்சு"ன்னு சொல்லி அதை அவனுக்கே தந்துட்டேன்.
ரெண்டே நிமிஷம், அந்த மிட்டாயை கடக் முடக்'குன்னு அவசர அவசரமா கடிச்சித் தின்னுட்டு, வெறும் வெள்ளைப் பி ளாஸ்டிக் குச்சியை என் கையில குடுத்து,
"ம்ம்ம் காக்கா உஷ்.... ம்ம்ம் காக்காஉஷ்", அப்டின்றான்.
"ம்ம்ம் காக்கா உஷ்.... ம்ம்ம் காக்காஉஷ்", அப்டின்றான்.
3 comments:
நாந்தான் ஃபர்ஸ்ட் போனியா? ப்ளீஸ் கண்டினியு..:)
நல்ல கதம்பம் ...
ராமா! நீங்க நல்லவரா கெட்டவரா? - கேள்வி கேட்பவர்கள் அதைப் பற்றிய விளக்கத்தை தேடுவதேயில்லை...
நல்ல கதம்பம்.....
நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Post a Comment