கையால் எழுதித் தள்ளும் ஒரு எழுத்தாளனின் போக்கில் சீரற்று, ஒழுங்கற்றுச் சிதறிக் கிடக்கும் எழுத்துகள், வாக்கியங்கள். ஒரு சாதாரண வலைப்பதிவனுக்கும் வாய்க்கும் அந்த நேர்த்தி செய்யும் வேலை பற்றிய அக்கறையற்ற “ஜஸ்டிஃபை” செய்யப்படாத ட்ராஃப்டிங். இப்படியெல்லாம் யாரேனும் ப்ளாக் எழுதினால் எனக்கு எரிச்சலாக வரும்.
ஆனால், இங்கே மேற்கோள் காட்ட அங்கிருந்து காப்பி பேஸ்ட் அடித்தபோதுதான் அந்த ஒழுங்கின்மையை கவனித்தேன். ஒரு தேர்ந்த கலைஞனுக்கு ”சீர்” என்பது வெளிப்பூச்சில் இல்லை, ஆனால் அவன் படைப்பில் உள்ளது என்பதுதான் நான் கண்மூடிக் கடந்ததன் காரணம் போலும்.
எழுத்தில் பதிவு செய்யப் படவேண்டிய எனது வாழ்க்கையின் அத்தியாயங்களை- குறிப்பாக சினிமாவுக்கும் எனக்குமான உறவை- இலக்கியத்திற்கும் எனக்குமான உறவை நான் சொல்லியாகவேண்டும்....
அவ்வப்போது அவைபற்றி எழுதலாமென்றிருக்கிறேன்...
இப்படி ஒழுங்கற்ற சீர் செய்யா பத்திகள். யார் அவர்?
தமிழ்த் திரையுலகை உலுக்கிய ஒரு கலைஞன். ஒரு இயக்குனராக, ஒரு ஒளிப்பதிவாளராக அவர் தன் அடுத்த தலைமுறைக்குத் தொட்டுக் காட்டிய உயரங்கள் எல்லாம் அசாதரணமானவை. மறுபடியும், மூன்றாம்பிறை, சதிலீலாவதி என்று மனதை ஆக்ரமிக்கும் இவர் படங்களை நம்மில் யார் மறப்போம்?
யெஸ், நம்ம பாலுமகேந்திரா சார் வலைப்பதிவு மூலமாக நம்முடன் பேச வந்திருக்கிறார்.
மூன்றாம்பிறை இயக்குனரின் புதிய வலைமனை முகவரி.
வெல்கம் சார்! உங்கள் அருகில் இருந்து கலை கற்கும் பாக்கியம் வாய்க்காத எம் போன்றோருக்கு இந்த இணையம் நிஜமாகவே ஒரு பெரும் வரப்பிரசாதம்தான்.
வெல்கம் சார்! உங்கள் அருகில் இருந்து கலை கற்கும் பாக்கியம் வாய்க்காத எம் போன்றோருக்கு இந்த இணையம் நிஜமாகவே ஒரு பெரும் வரப்பிரசாதம்தான்.
3 comments:
மிக்க நன்றி சார்... அவர் தளத்திற்கு செல்கிறேன்...
தனபாலன் ஸார்.
எங்கே, தங்களை இப்போதெல்லாம் ஆம்னிபஸ் பக்கமே காண முடிவதில்லை?
அருமை.
வாழ்த்துகள்.
Post a Comment