ஒருமுறைதான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை;
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண்மனம் புரிவதில்லை
வருகிற வலி அவள் அறிவதில்லை;
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண்மனம் புரிவதில்லை
நா.முத்துக்குமார் - இன்றைய தமிழ்த் திரைப்பாடல் உலகின் தலைசிறந்த பாடலாசிரியர்.
கண்ணதாசன், வாலி, வைரமுத்து என்று வரிசைப்படுத்தினால்
அதற்கு அடுத்த தலைமுறைப் பாடலாசிரியர்களில் ஒரு பெரிய சிம்மாசனம் போட்டு
அமர்ந்திருப்பவர். மிக முக்கியமானவர்.
2004’ஆம் வருடம் கோவை சென்றிருந்தபோது என் ரெண்டுவிட்ட சகோதரன் சந்தோஷுடன் ”7ஜி ரெயின்போ காலனி” படத்தில்
வரும் “கண்பேசும் வார்த்தைகள்” பாட்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன். படம் வெளியான
வாரயிறுதி அது. அப்போதுதான் அந்தப் பாடலை முதல்முறை தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறார்கள்.
சந்தோஷிடம்
சொன்னேன், “இந்தப் பாட்டு பாரு. சூப்பர் ஹிட் ஆகும், படமும்”.
பாடல்
முதல்முறை டிவியில் பார்த்தபோது ரவிகிருஷ்ணாவின் சோகம் தோய்ந்த விரக்தியான
எக்ஸ்ப்ரெஷன்களும், சுமன் ஷெட்டி தகரக்கதவில் தாளம் போடுவதுமாக ஏதோ
ரெண்டாந்தர காட்சிப்படுத்தல் போலத் தோன்றியது முதல்முறை பார்த்தபோது.
”சான்ஸே இல்லை. மொக்கை பாட்டு இது. கேவலமா
இருக்கு”, என்றான்.
நான் கவனித்தது அந்தப் பாடல் வரிகளை, யார் எழுதியவை என அப்போது தெரியவில்லை என்ற போதிலும். காலாகாலமாய்க் காதல்
விஷயத்தில் பெண்களைக் குறைசொல்லும் ஒரு ஆண்வர்க்கத்துப் பாடல். ஆனால், காயம்பட்ட ஒரு ஆணின் மனதிற்கு மருந்தாய் ”நச்” என்ற அற்புத வரிகள் அவை. அந்தக் காலகட்டத்தில்
என் மனம் ஏதும் புண்பட்டிருந்ததா என்ற க்ராஸ் கொஸ்சின் எல்லாம் இங்கே வேண்டாமே, ப்ளீஸ்!
அடுத்த
இரண்டுவார காலத்தில் பாடல்களுக்காய் அந்தப் படத்தை சந்தோஷ் நான்குமுறை பார்த்தது தனிக்கதை.
2006’ஆம் ஆண்டு இன்னொரு ஒன்றுவிட்ட சகோதரனான
குருபிரசாத் என் கையில் “சூப்பர் புக்ண்ணா”, என்று எனக்குப் பிறந்தநாள் பரிசாக கண்பேசும் வார்த்தைகள் புத்தகத்தைத் தந்தபோதுதான் எனக்கு நா.முத்துக்குமாரை
அறிமுகம். அதுவரை மற்றுமோர் பாடலாசிரியராக நா.முத்துக்குமாரை அறிந்திருந்தவன் நான். நான் வாசித்த மனசைத் தொட்ட புத்தகங்களுள் கபேவா’வும் முக்கியமான ஒன்று. கபேவா பற்றித் தனியாக நெடுங்கட்டுரையே எழுதலாம். நா.முத்துக்குமார் குறித்த என் சிலாகிப்புகளை ஒரு தொடராகத்தான் எழுதவேண்டும்.
கபேவா புத்தகத்தில் இருந்த ஒரு குறிப்பை வைத்துக் கொண்டு பட்டாம்பூச்சி விற்பவன் புத்தகம் பற்றி அறிந்தவன், ஐந்து வருடங்களாக அதைத் தேடியலைந்தேன். இந்த
வருட சென்னைப் புத்தகக் கண்காட்சியில்தான் கடைசியாக அந்தப் புத்தகம் கிடைத்தது.
நா.முத்துக்குமாரின் பட்டாம்பூச்சி விற்பவனுக்கு ஆம்னிபஸ்சில் எழுதிய விமர்சனம் இங்கே
நா.முத்துக்குமாரின் பட்டாம்பூச்சி விற்பவனுக்கு ஆம்னிபஸ்சில் எழுதிய விமர்சனம் இங்கே
2 comments:
நல்லதொரு அலசலுக்கு மிக்க நன்றி சார்...
அருமையான பதிவு.
நன்றி.
Post a Comment