யதேச்சையாக இரண்டு யுடியூப் வீடியோக்களைக் கண்டேன்.
முதல் செய்தி கொஞ்சம் பழையது. நடிகர் ஜெயராம் தமிழ்ப் பெண்களை இழிவுப் படுத்தினார் என்று தமிழகமே பொங்கி எழுந்த செய்தி. இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இரண்டு:
1 . சன் டிவி வழக்கம் போல நீதியைத் தன் கையில் எடுத்துக் கொள்கிறது. தமிழ்ப் பெண்களை இழிவுப் படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நடிகர் ஜெயராம் என்பதாகவே செய்தி இருக்க வேண்டும், நீதியின் மூலம் அவர் செய்ததாகச் சொல்லப்படும் குற்றம் நிரூபிக்கப் படும் வரை. இங்கே சன் டிவி எப்படிச் செய்திகளைத் தொடங்குகிறது எனப் பாருங்கள்.
2 . செய்திக் காட்சியில் பின்னணியில் ஒலிக்கும் குரலின் தமிழைக் கேளுங்கள். இவர்களை விட ஜெயராம் மோசமான இழிவை செய்திருக்க வாய்ப்பில்லை.
http://naamtamilar.wordpress.com/ இணைப்பில் காணக் கிடைக்கும் இரண்டாவது வீடியோவில் இன்று மதுரையில் நடக்கவிருக்கும் நாம் தமிழர் அமைப்பின் தொடக்க விழாவிற்கு அழைப்பு விடுக்கிறார் இந்தத் தம்பி (யார் இவர்?). அரசியள், சிளம்பு, விளங்குகள் எனத் தாறுமாறாகத் தமிழ் பேசுகிறார். கூகிள் கூட தமிழை தவறாக தட்டினாலும் சரியாகக் கொணர்கிறது சார். நாம் தமிழர் என இயக்கப் பெயரை வைத்துக் கொண்டு இப்படித் தமிழ் பேசினால்.....? எனக்கு இது சரியா வரும்னு தோணலை!
இவங்களை மொதல்ல தமிழ் படிக்க அனுப்புங்க, பின்னால இவங்க நாம் தமிழர்'ன்னு மார் தட்டட்டும்.
.jpg)
