தந்தியை விட வேகமானது வதந்தி! இது மொபைல் போன் காலத்திற்கு முன்னால் சொல்லப்பட்ட சொல்.
மொபைல் போன் கையில் இருக்கிறது என்ற ஒரே காரணத்தால் நேற்று நம் தமிழர்கள் நடிகர் கவுண்டமணியை sms-ல் கொன்று கொண்டே இருந்தார்கள். நமக்கு ஒரு குறுஞ்செய்தி வந்ததே, அது உண்மையா, இல்லையா? ஊர்ஜிதம் செய்தபின் இதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வோம் என்ற பக்குவம் இங்கு யாருக்கும் இல்லை.
அவருக்கு ஆன்ஜியோக்ராம் சோதனை நடந்ததாகவும், விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை நடக்கவிருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் விரைவில் குணமடைவார், வதந்திகளை நம்பவேண்டாம் என அவர் மகள் சொல்லியிருக்கிறார்.
தன் விதவிதமான நகைச்சுவை கதாபாத்திரங்களால் தமிழ்த்திரையுலகை மூன்று தசாப்தங்கள் ஆண்ட, சமீபத்தில் ஜக்குபாய் மூலம் ஒரு நல்ல come-back தந்த அந்தக் காமெடி அரசன் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு வாழ எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.
