Showing posts with label Suraa. Show all posts
Showing posts with label Suraa. Show all posts
May 1, 2010
சுறா - என் பார்வை
சுறா படத்தின் முதல்கட்ட வலைமனை விமரிசனங்கள், எஸ்.எம்.எஸ். தகவல்கள், நண்பர்களின் எச்சரிக்கைகள் இத்தனையும் கேட்டபின் ஒரு யோசனையுடன்தான் இன்றுகாலை படம் பார்க்கப் போனேன்.
ஆனால் விஜய் அப்படி ஒன்றும் ஏமாற்றவில்லை. அவரது வழக்கமான படங்களுக்கு ஒரு அடியும் பிசகாமல் ஒன்றும் குறைவில்லை ஒன்றும் அதிகமில்லை என்னும் பாணியில் படம் இருந்தது. நாம் நிறைய எதிர்பார்க்கக் கூடாது அவ்வளவே.
புளியமரம்......புளியம்பழம் கிடைக்கும். தட்ஸ் இட். மாம்பழ சீசன் என்பதால் மாம்பழமா பழுக்கும்?
சென்னையில் கடும் மழை, கடும் வெள்ளம்.மீனவ குடும்பங்கள் யாழ்நகர் (!!!) கடலோரம் கடல் நோக்கி வெறித்த பார்வை பார்த்தவாறே எதையோ எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. உடன் கலெக்டர், போலீஸ் ஆபீசர்கள், டாக்டர்கள், நர்சுகள்.
"அய்யா கடலுக்குப் போன எங்களைச் சேர்ந்த அறுவது மக்கள் இன்னும் திரும்பலையா, ரெண்டு நாள் முன்னமே வந்திருக்க்கணும அய்யா...."
"சார்...எஸ்...சார்...தேடிட்டு இருக்கோம் சார்....கடற்படை ஹெலிகாப்டர், படகுகள் மூலமா தேடறோம் சார்...எப்டியும் கண்டுபுடிச்சுடுவோம் சார், ஓகே சார்....ஓவர் சார்"
"சார் கண்டுபுடிச்சிட்டோம் சார், நம்ம படகுகள் மீனவர்கள் எல்லோரையும் பத்திரமா அழச்சிட்டு வருது சார்"
"சி.எம்.சார், எல்லாரையும் பத்திரமா கரை மீட்டுட்டோம் சார்"
"என்ன, நல்லா தேடுங்கப்பா, நம்மள்ள ஒருத்தரக் காணமா? யாரு அது, என்ன? நம்ம சுறாவா?"
"இங்க பாருங்க சி.எம்.க்கு அப்டேட் குடுத்துட்டோம், ஒருத்தர் காணோம்கறத எல்லாம் பெருசு பண்ணாதீங்க"
"எப்படிங்க, அவன் எங்கள்ள ஒருத்தன், எங்களுக்காக ஒருத்தன்....அவன் ஒருத்தன்தான்...ஆனா அவன் பலம் நூறு யானைக்கு சமம், அவன் இது பத்தாயிரம் அதுக்கு சமம், அவன் சாமர்த்தியம் ஒரு லட்சம் சாணக்கியனுக்கு சமம், அவன் அது ஒரு கோடி இதுக்கு சமம்"
ஏ காமெராவ கடல் பக்கம் திருப்புப்பா....யாரோ நீந்தி வர்றாங்க....
அட...நம்ம தலைவர் விஜய் நீந்தியே கரை சேர்கிறார்....இடையிடையே டால்பின் கணக்காய் பறந்து பாயும் நீச்சல் வேறு. ஓகே..இப்போ ஓபனிங் சாங்குக்கு நேரம் வந்துடுச்சி....
வெற்றிக்கொடி ஏத்து... என்னைக் காலில் எத்து...
அப்புறம்....படம் பத்தி நான் வேற ஏதாவது சொல்லணுமா?
ஓகே...தமன்னாவுடனான காதல்:
ஸீன் ஒன்று: தமன்னா நாய்க்குட்டி காணோம். கடலில் தற்கொலை முயற்சி. விஜய் காப்பாற்றுகிறார்.
ஸீன் ரெண்டு: நடுரோட்டில் ஒரு பார்வையற்ற தம்பதியருக்கு விஜய் தன் வழக்கமான பாணியில் உதவுவதைக் கண்டு தமன்னா நெகிழ்கிறார்.
ஸீன் மூன்று: மீண்டும் கடற்கரையில் தற்கொலை முயற்சி.
"என்ன கண்ணு பண்ற?"
"சாக போறேன்."
"எதுக்கு"
"என் லவ்வரு என்ன லவ் பண்றாரான்னு தெரியல"
"அவன்கிட்ட உன் லவ்வ சொன்னியா"
"அய்யய்யோ இல்லியே, சுறா ஐ.லவ்.யு."
அப்புறம் எதுனா சொல்லணுமா? அதுக்கு அப்புறம் என்னன்னா?
அதுக்கு நான் தனியா ஒரு புக்கு எழுதறேன். அடுத்த வருஷம் புத்தகத் திருவிழால வாங்கிப் படிங்க.
போயிட்டு வரட்டுமா?
Mar 30, 2010
சுறா - பாட்டு இல்லீங்க்ணா புட்டுங்கண்ணா
சுறா - இசை விமரிசனம்!
காலத்தின் கட்டாயம் இந்தப் படப் பாடல்கள் ஹிட்டாகப் போவது உறுதி. கலாநிதி மாறன் & கோ'விடமிருந்து வெளிவரும் எதுவுமே ஹிட் என்பது எழுதாத சட்டமாயிற்றே!
சரி...பாடல்களைப் பற்றி.....
இளைய தளபதி விஜய்
"தமிழன் வீரத் தமிழன், தலைமை தாங்கும் ஒருவன், நெற்றிக்கண் திறப்பான், துயரம் நேர்ந்த இடத்தில் தோள் கொடுப்பான்... என்று வழக்கம் போல் அண்ணன் புகழ் ஏற்றும் ஒரு பாட்டு...
படத்தில் சரேலென வரப்போகும் ஒரு ரொமாண்டிக் டூயட் - "சிறகடிக்கும் நிலவு". ஏதோ ஒரு பழைய பாடலை நினைவூட்டுகிறது...
"தஞ்சாவூர் ஜில்லாக்காரி, முந்தானைத் தோட்டக்காரி" (ரூம் போட்டு யோசிச்சிருப்பாரோ நா.முத்துக்குமார்?) - இது இன்னொரு டூயட்.
மேலும் ஒரு சுய விளம்பர டூயட்: "நான் நடந்தால் சரவெடி..." - no comments!
"காக்கைக்கொரு கூடு உண்டு...ஏழைக்கு இங்கே வீடு எங்கே உண்டு" என ஏழை பாழைகளைப் பார்த்து காலாகாலமாய் நம் கதாநாயகர்கள் கிண்டல் செய்துவரும் இன்னொரு பாட்டு "வெற்றிக் கொடி ஏத்து!" (இந்த வகைக் கிண்டல்களை இன்னும் நம் மக்கள் புரிந்து கொள்ளாதது துயரம்) - இந்தப் பாடல் ஓபனிங் பாடலாக இருக்கக் கூடும். பாடலை எழுதியவர் வாலிபக் கவிஞர் வாலி. எம்.ஜி.ஆர். ரஜினின்னு எல்லோருக்கும் இப்படி எழுதியாச்சு...நம்ம விஜய்க்கும் எழுதுவோன்னு...???
இன்னும் ஒரு பாட்டு இருக்கு...(வங்க கடல் எல்லை ) அதைக் கேட்கும் பாக்கியம் எனக்கு கெடைக்கலை.
மத்தபடி, நீங்க கேளுங்க கேளுங்க....கேட்டுட்டே இருங்க....!! எப்டியோ போங்க!
Subscribe to:
Posts (Atom)

