மழையில் நாம் அறிந்தவரையில் இரண்டு வகைகள்தான். ஒன்று நாம் எல்லோரும் அறிந்த சாதாரண மழை, இரண்டு பனியாய் அல்லது பனிக்கட்டிகளாய்ப் பெய்யும் ஆலங்கட்டி மழை. மூன்றாவது வகை மழையை சந்தித்திருக்கிறது வடக்கு ஆஸ்திரேலியாவின் லஜமனு என்னும் சிறு கிராமம். அது "மீன் மழை". சடசடவென்று வானிலிருந்து மழை நீருடன் சேர்ந்து மீன்களும் உயிருடன் துள்ளிக்கொண்டு குதித்தவாறே கொட்ட ஆரம்பித்ததும் அந்த கிராமத்து மக்களுக்கு ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி.
இது கடவுளின் செயல்தான் என அறிவியல் வல்லுனர்களும் ஒப்புக்கொள்வார்கள் என எதிர்பார்த்த வேளையில் அவர்களின் விளக்கம் வேறு மாதிரி இருந்தது. Tornado எனப்படும் ஒருவகை சூறாவளிப் புயல் ஆற்றிலிருந்து நீருடன் சேர்த்து மீன்களையும் மொண்டு சென்றுள்ளது. பல நூறு மைல்கள் பயணித்த பின்னர் வானிலிருந்து மீன்களை இந்த குறிப்பிட்ட கிராமத்தின் மீது வெளியிட்டிருக்கிறது அந்த Tornado.
அந்த கிராமத்துவாசி ஒருவர் சொன்னாராம், "நல்லவேளைங்க, அந்த சூறாவளி முதலை எதையும் தூக்கி வரலை".
2 comments:
இதே மேட்டர் நானும் பதிவிட்டேன்
சில நடாலுக்கு முன்
http://sangarfree.blogspot.com/2010/03/blog-post_04.html
நன்றி சிவா!
தங்கள் வருகை மற்றும் கருத்திற்கு நன்றி.
(தங்கள் பெயரை தங்கள் தளத்தில் தவறைக் குரித்தமைக்காக வருந்துகிறேன்).
Post a Comment