Mar 5, 2010

ஒலி விளக்கே!??

பழைய மகாபலிபுரம் சாலை என அறியப்பட்ட, தகவல் தொழில்நுட்ப விரைவு வேகச் சாலை எனப்படும், ராஜீவ் காந்தி சாலையாக பெயர் மாற்றம் பெற்ற சாலைக்கு விரைவில் அன்புத் தளபதி சாலை எனப் பெயர் மாற்றம் ஏற்படுமோ எனத் தோன்றுகிறது.

வழி நெடுக டைடல்பார்க் தொடங்கி சோழிங்கநல்லூர் வரை ஒவ்வொரு நூறு மீட்டர் இடைவெளியிலும் நம் துணை முதலமைச்சர் வகை வகையாய் சிரித்தபடி போஸ் கொடுத்த வண்ணம் இருந்தார். எத்தனை கட்-அவுட்டுகள் எத்தனை பேனர்கள். யப்ப்ப்பப்பா! ஒவ்வொரு பேனரிலும் ஒவ்வொரு அடைமொழி. "அன்புத் தளபதியே", "எங்கள் துணை முதல்வரே", "குறிஞ்சி மலரே", "எங்கள் ஆசானே", "இளைய சூரியனே", "இளஞ்சூரியனே", "எங்கள் சூரியனே", "உதய சூரியனே", "எங்கள் ஒலி விளக்கே" (ஒலிக்கும் ஒளிக்கும் வித்தியாசம் தெரியாத இவர்களை என்ன செய்ய?), "பாசத் தலைவனே"...மீதம் எனக்கு மறந்து விட்டது. மு.க.ஸ்டாலின் என்ற அவர் உண்மைப் பெயர் ஒரு இடத்திலாவது இருக்க வேண்டுமே...ஊகூம்....!!

தலைவர்களுக்கு தங்கள் இருப்பை மக்களிடம் காட்டிக் கொள்ள அவசியம் இருக்கிறது, தொண்டர்களை முடுக்கி விட்டு விளம்பரம் அமைக்கச் சொல்கிறார்கள். அவர் தொண்டர்களுக்கோ தங்கள் தலைவனிடம் தங்கள் இருப்பைக் காட்டும் அவசியம் இருக்கிறது, விளம்பரம் அமைக்கிறார்கள். எப்படியோ, பொது மக்களுக்கு அங்கே இங்கே இடைஞ்சலாக இருந்தாலும், இந்த பேனர் நடும் தொழிலை நம்பி இருப்பவர்களுக்கு ஏதோ பிழைப்பு ஓடுகிற்து.

அது சரி.... தளபதி அவர்கள் பிறந்த நாள் கொண்டாடி நான்கு நாட்கள் கடந்த பின்னரும் இந்த தட்டிகள் நீக்கப்பாடாமல் இருப்பதை நம் நகராட்சி மாநகராட்சிகள் கண்டு கொள்ளாதது ஏன்?  இப்போது இருக்கும் சட்டப் படி பேனர்கள் மூன்று நாட்களுக்கு மேல் தங்கக் கூடாதாயிற்றே!

இருங்க இருங்க...."டேய்...இப்படியெல்லாம் கேள்வி கேட்டா சன் நியூஸ் சேனல்-ல உன் அந்தரங்கம் வெளிய வரும்", என ஏதோ குரல் கேட்கிறது.  யப்பா கனவான்களே,  என் நினைவுக்கு தெரிஞ்சி எனக்கு அப்படி ஏதும் அந்தரங்கம் இல்லையே நைனா!!

2 comments:

Bhaski said...

Indha ads a poora thalaivargal dhaan kudukka solraanga ngaradhai naan othukka maatten..... indha jaalraa gostis the so called narpani mandrangal, thondargal avangaulkku kaasu venum ngradhukosaram ippadi design design a poster adichi eduthuttu pOyi thalaivar kitte kaamipaanga.... then the thalaivar will become happy and give them dhuttu..... Arasiyal la main vishayam rende rendu dhaan Dhuddu, cheap politics.... real politics (makkal sevai) evanum panradhu illai.....

Unknown said...

தமிழக தேர்தலின் வரலாறுகள், தமிழக அரசியல் வாதிகள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள http://www.valaitamil.com/politics_history

Related Posts Plugin for WordPress, Blogger...