விவாதங்கள் தொடர்கின்றன. இன்னும் தமிழகம் ஒரு நித்தியானந்தா விஷயத்தை விட்டு வெளியே வரவில்லை. மேலும் மேலும் மக்கள் செய்திகளை எதிர்பார்க்கிறார்கள்.
நித்யானந்தா ஆகட்டும் அல்லது காஞ்சிபுரம் தேவநாதன் ஆகட்டும், இருவரது விஷயத்திலும் இந்த இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசம் செய்த உருப்படியான வேலை அந்த அசிங்க விடியோக்களை தமிழகத்தில் நீலப்பல் கொண்ட ஒவ்வொரு மொபைல் போனிலும் பதிய வைத்தது. என்னே ஒரு சேவை? இவர்களின் சமூகசேவை நோக்கு நம்மைத் திக்குமுக்காட வைக்கிறது.
மேலும் பலன்கள் என்றால்....
மின்னஞ்சல் குழுக்கள் சூடான விவாத மேடைகள் ஆகின, ஜெயமோகன் முதலான முன்னணி எழுத்தாளர்களின் மின்னஞ்சல் பெட்டி அவர்கள் வாசகர்களின் கேள்விகள் தாங்கிய அஞ்சல்களால் நிரம்பின (இது சரியா தவறா?, யார் செய்தது தவறு சாமியா சன்னா?, நான் அவர் சிஷ்யன் நான் இப்போது என்னை செய்யட்டும்? என வித விதக் கேள்விகள்), கூகிள் தேடுதல்களில் நித்யானந்தா முன்னிலை பெற்றார், வடக்கத்திய தொலைக்காட்சி சேனல்களுக்கும் கொஞ்சம் நல்ல தீனி கிட்டியது, டிவிட்டர் போக்குவரத்து அதிகரித்தது, தினகரன் மாற்றி மாற்றி உலகெங்கும் படிக்கப்பட்டது, வரலாறு காணாத அளவிற்கு இக்கட்டுரைகளுக்கு தினகரனுக்கு கமெண்டுகள் குவிந்தன....பட்டியல் நீள்கிறது.
பலர் பலவிதமாக சுவாமியை இணையத்தில் திட்டித் தீர்க்கிறார்கள்.
ஜெயமோகன் நீண்ட மூன்று பதிவுகளை நாம் இந்த விஷயத்தில் ஆழமாய் சிந்திக்கத் தந்திருக்கிறார்.
ஆன்மீகம்,போலி ஆன்மீகம் – 1
ஆன்மீகம், போலி ஆன்மீகம் – 2
ஆன்மீகமும் போல் ஆன்மீகமும் 3
ஆன்மீகமும் போல் ஆன்மீகமும் 3
சேகர் கபூரின் பார்வையைப் பாருங்கள். நாலு புறமும் திரும்பி எல்லோரையும் நாலு சாத்து சாத்துகிறார்.
Sex and the Guru
...விவாதங்கள் தொடர்கின்றன....
No comments:
Post a Comment