காமெடி என்றால் காமெடி அப்படி ஒரு காமெடி... ஆரம்பத்திலிருந்தே காமெடிதான். திடீரென கொஞ்சமே கொஞ்சம் சீரியஸ் ஆவது போல ஒரு தோற்றம்... உடனே அடுத்த காமெடி வந்து விடுகிறது.
திடீரென பரபரப்பாக ரொம்பவே சீரியஸ் ஆவது போல்....அடுத்து முன்னைக்கு நாற்பது மடங்கு அதிகமாக காமெடி.
அடிக்கடி அடிக்கடி "நண்பேன்டா" "நண்பேன்டா" என வசனங்கள்....
காமெடியாகட்டும் சீரியஸ் ஆகட்டும் எதுவாக இருந்தாலும் அது "செவென்-அப்" சிப்புவது போல் சிலிர்க்கிறது.
பாஸ் (எ) பாஸ்கரன்..... நல்ல மொழி ஆளுமை, நகைச்சுவைத் திறன், தேர்ந்த இலக்கிய வாசிப்பு என........
"ஏய் தம்பி....நில்லு நில்லு... பாஸ் (எ) பாஸ்கரன் பத்தி சொல்லுன்னா நீ என்ன இலக்கியம், வாசிப்புன்னு பீலா வுடற...?"
என்னது...அட, நீங்க என்ன பா.எ.பா படத்தைப் பத்தி நான் இங்க எழுதறேன்னு நெனச்சீங்களா?
ச்சே ச்சே... இல்லீங் சாமி! நம்ம நட்பாஸ் (எ) பாஸ்கரன் ஆதி நாள் தொட்டு சிரத்தையா என் தளத்துல பின்னூட்ட ஊக்கு வெச்சு குத்தற.... ஓவ் ஸாரி... பின்னூட்ட ஊக்குவிப்புகள் செய்யறதப் பத்தி நான் சொல்லறேன். இப்போ மேல படிங்க...
..... நல்ல மொழி ஆளுமை, நகைச்சுவைத் திறன், தேர்ந்த இலக்கிய வாசிப்பு என........
ஏய்...டுபுக்ஸ்....கொஞ்சம் நிறுத்தறியா...
ஹலோ ஹலோ....சேனல் மாத்தாதீங்க... வர்ற வெள்ளிக்கிழமை சாய்ங்காலமா பாஸ் என்கிற பாஸ்கரன் பாக்கறேன். அதன் பின்னால விமரிசனம். ஓக்கேவா... ?
.
.
.
7 comments:
என்ன ஒரு வில்லத்தனம்!
யாரப்பா அங்க, ஆட்டோ எடு!
ஹி ஹி ஹி... சும்மா....டமாசு....
ஆட்டோன்னு சொல்லாதீய.... சின்னக் கண்ணன் கோச்சுக்கப் போறாரு...
சூமோ அனுப்பறது....???
நண்பேன்டா என்று சொல்லிக் கொண்டே ஒவ்வொரு காட்சியிலும் (பின்னூட்டத்தில்) குத்தும்போது சிரிப்பு வருதாம்லே.
இப்படிக்கு
புள்ளி வச்சே பின்னூட்டம் வாங்கற பாஸ் எ பாஸ்கரனின் ரசிகர் மன்றத் தலைவர்.
(பள்ளியில் கூடப் படிக்கும்போதே ரசிகர் மன்றம் வச்சுட்டோமுல்ல)
ரைட்டு.. நீங்க நடத்துங்க பாஸ் :)
வீரா,
போன மாசம் சொல்வனத்துல ஒரு கட்டுரை எழுதினேன். அதுவரை சொல்வனமே படிச்சிருக்காத நீங்க, வேலை மெனக்கெட்டு அதுல இருக்கற நொட்டை நொள்ளையை எல்லாம் பட்டியல் போட்டு அவங்களுக்கு கர்ம சிரத்தையா பின்னூட்டம் போட்டீங்க. அதோட சரி, அவங்க அடுத்த ஒரு மாசத்துக்கு ப்ளாக் லிஸ்ட் பண்ணிட்டாங்க. சரி, நண்பென் ஆச்சேன்னு விட்டுட்டேன்.
அப்புறம், என்ன ஆச்சு? பேயோன் எவ்வாளவு பெரியவர்? முதலில் ஒரு வரி, அப்புறம் ரெண்டு வரின்னு கொஞ்சம் கொஞ்சமா என்னோட இமேஜை பில்ட் அப் பண்ணின அப்பல்லாம் சும்மா பாத்துக்கிட்டு இருந்த நீங்க.... அவரோட மூணு வரி கதை ஒன்றுக்கு, இந்த தடவை இம்ப்ரெஸ் பண்ணிற வேண்டியதுதான்னு விவரமா, கண் காது மூக்கு வெச்சு நான் பின்னூட்டம் போட்டேன். அப்ப கூட ஒண்ணும் சொல்லலை நீங்க. அதைப் படிச்சுட்டு சமகால இலக்கியவாதிகளில் மிக முக்கியமானவரான திரு சென்ஷி அவர்கள் அரண்டு போய், "பேயோன், உங்கப் பதிவுகளுக்குப் பின்னூட்டம் போடறவங்களைப் பாத்தா கலவரமா இருக்கு!" என்று எழுதினார். அப்பத்தான் முழிச்சுக்கிட்டீங்க போல இருக்கு. இதுவரை அந்தப் பக்கம் தலை வெச்சே படுத்திருக்காத நீங்க உடனே உள்ள நுழைஞ்சு, "இல்லை, இந்தக் கதை காது பத்தி இல்லை. கையைப் பத்தி," அப்படீன்னு பின்னூட்டம் போடறீங்க. அதுல என்ன கொடுமைன்னா ஒருத்தர், "உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே கிடையாதான்னு!" உங்களைப் பத்தி மெச்சி புல்லரிச்சுப் போய் எழுதறார். எப்படியோ, மகுடத்தைத் தட்டிக்கிட்டு போயிட்டீங்க. சரி, நண்பென் ஆச்சேன்னு விட்டுட்டேன்.
கிரி சார், நம்ம நண்பர் வீரா இதுக்கு முன்னால இங்க வந்திருக்காரு? நீங்களும் நன்பேனா அழகா, தீவிர இலக்கியவாதி ப்ளஸ் சிந்தனாவாதி ஆகியே தீருவதென்று அவதானித்துக் கொண்டிருக்கிற என்னைக் அவுட் அன்ட் அவுட் காமெடியனா காட்டி பதிவு பண்ணறீங்க. சரி, நண்பென் ஆச்சேன்னு விட்டுட்டேன். ஆனா இங்கயும் வீரா உடனே வராரு பாருங்க- "ஆரம்பத்திலிருந்தே காமெடிதான். திடீரென கொஞ்சமே கொஞ்சம் சீரியஸ் ஆவது போல ஒரு தோற்றம்... உடனே அடுத்த காமெடி வந்து விடுகிறது," அப்படின்னு நீங்க உள்குத்து பண்ணினா, நம்ம வீரா அண்ணன் சுறுசுறுப்பா ஓடி வந்து சொல்றாரு, "நண்பேன்டா என்று சொல்லிக் கொண்டே ஒவ்வொரு காட்சியிலும் (பின்னூட்டத்தில்) குத்தும்போது சிரிப்பு வருதாம்லே."
உங்களுக்கு எல்லாம் ஏன் சிரிப்பு வராது? எல்லாம் என் நேரம். இன்னும் நம்ம அபராஜிதன் ஒத்தர்தான் "நண்பென்டா!"ன்னு முதுகுல மொத்தலை. :)
வீரா, இது உங்களுக்குத் தனிப்பட்ட எச்சரிக்கை. இனி ஒரு தடவை நான் போற இடமெல்லாம் தொரத்திக்கிட்டு வந்து என் இமேஜை டேமேஜ் பண்ணினீங்க, ஸ்கூல்ல நடந்த விஷயங்களை எல்லாம் எடுத்து விட வேண்டியதாப் போயிடும். ஜூலியஸ் சீசர் கிளாஸ்ல நீங்க சிரிச்சு வாத்தியார் கிட்ட மாட்டிகிட்டபோது புத்திசாலித்தனமா, ஷேக்ஸ்பியர்லேருந்தே கோட் பண்ணி உங்களைக் காப்பாத்தினது நான்தான்னு மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.
நண்பேனாம், நண்பேன்! எனக்குன்னு வந்திருக்கீங்களே!!!
இதோ பாருங்கப்பா. நான் பாட்டுக்கு தேமேன்னு ஒன்று இரண்டு பதிவு போட்டுகிட்டு உட்காந்திருந்தவனை உசுப்பி விட்டு எழுது எழுதுன்னு சொல்லி ( நமக்கு மட்டும் 24 மணி நேரம் 2.4 மணி நேரமாகுதே.) டிவி மெகா சீரியல் மாதிரி ஒவ்வொரு தொடராக ஆரம்பிச்சு விட்டு டமார் அப்படியே விட்டு புதுசு புதுசா ஆரம்பிச்சா இதையாவது உருப்படியாக எழுது அப்படின்னு அட்வைஸ் பண்ணும் பாஸ் (எ) பாஸ்கரனின் (ஹா ஹா) எச்சரிக்கைக்கெல்லாம் (ஹி ஹி) நாங்க பயப்பட மாட்டோம். இதைக்கூட தலைவரைப் பின்பற்றலைன்னா அப்புறம் என்ன ரசிகர்?
இப்படிக்கு
பாஸ் (எ) பாஸூ ரசிகர் மன்றத் தலைவர்
பி.கு இந்த 24ந்தேதி விஷயத்தினால் பெங்களூர் டிரிப் கான்ஸல்.
yappa kanna kattuthey
Post a Comment